நாம் விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.
• நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே.
• பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.
• மஹாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.
• சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
• சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
• சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
• சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார்.