பங்குனி வசந்தகால ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி, காமேஸ்வரர் - காமேஸ்வரி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி வசந்தகால ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

காமேஸ்வரர் - காமேஸ்வரி

சிவனுடையதும் சக்தியினுடையதும் மிக உயர்ந்த வடிவம் மகா காமேஸ்வரன் மகா காமேஸ்வரி எனப்படும். அவர்கள் எல்லையற்றதும் நித்தியமானவர்களும் ஆவர்.  

நித்திய நிலையில் அவள் "ப்ரகாச விமர்ச மஹா மாய ஸ்வரூபினி" என அழைக்கப்படுகிறாள். இருவரும் நித்திய வடிவில் நான்கு கைகளுடன் ஒரே ஆயுதங்களை ஏந்திய வண்ணம் உள்ளார்கள். 

அவர்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் - பாசம், அங்குசம், கரும்பு வில், மலர் அம்புகள் என்பவையாகும். இருவரது கிரீடத்திலும் சந்திரன் உள்ளது. மகா காமேஸ்வரர் துய, பளிங்கு போன்ற, நிறமற்ற வடிவானவர். 

சிம்ஹாசனத்தில் அமர்ந்து இடது காலை மடித்து வலது காலை நிலத்தில் ஊன்றியவண்ணம் இருக்கிறார், தேவி சிவப்பு நிறமுடைய அதீத அழகுடையவள், புன்னைகையினை வீசியவண்ணம் விளையாட்டுத்தனமும், அருளும், பக்தர்களின் பிரார்த்தனையினை எப்போதும் கேட்கும் நிலையில், காமேஸ்வரரை நோக்கி வெட்கத்துடன் நடக்கின்றாள். 

அவளது ஒவ்வொரு அடியும் காமேஸ்வரரை நோக்கி நகர அவரது தூய வெண்மை நிறம் சிவப்பாகிறது. அந்த நடையின் அழகில் அன்னப்பறவைகள் வெட்கிவிடக் கூடிய அழகுடன் கூடியவை.

சஹஸ்ர நாமத்தின் இறுதியில் வரும் நாமங்களில் ஒன்று "சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி" என்று குறிப்பிடுகிறது. இந்த நாமத்தில் விளக்கமே மேலே கூறப்பட்டது. இந்த வடிவம் நித்தியமானது. 

சிவ ஸக்தி ஐக்கியத்திற்கு மேற்பட்ட நித்திய நிலை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகா என்ற நாமத்துடன் முடிவுறுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top