ஸ்ரீசக்ர நவாவரண பூஜையில் ஸ்ரீமத் லலிதாவுடன் அருளும் பரிவார தேவதைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீசக்ர நவாவரண பூஜையில் ஸ்ரீமத் லலிதாவுடன் அருளும் பரிவார தேவதைகள் பற்றிய பதிவுகள் :

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பாளை
"ஓம் மஹா சதுஷ்ஷஷ்டிகோடி யோகினிகண ஸேவிதாயை நம:" என்று போற்றுகிறது

மகா என்றால் ஒன்பது என்றும் மகா என்றால் எண்ணிலடங்கா என்றும் பொருள். சதுஷ்ஷஷ்டி கோடி என்றால் அறுபத்துநான்கு கோடி ஆகும். அதை ஒன்பதால் பெருக்க 576 கோடி வரும்.
அப்பேற்பட்ட 576 கோடி யோகினி சக்திகளை தன் பரிவார தேவதைகளாக கொண்டுள்ளவளே லலிதாம்பிகை ஆவாள்.

அத்தகைய எண்ணிலடங்கா தேவிகளின் பிரதிநிதிகளாக விளங்கும் 125 சக்திகள், ஸ்ரீசக்ரத்தில் பிறந்து அதன் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ லலிதா மஹாதிரிபுரசுந்தரியை சுற்றி வீற்றிருக்கின்றனர். அவர்களின் நாமாக்கள் பின்வருமாறு:

அணிமாதி யோகினி தேவதைகள் 10 பேர் :

1. அணிமா ஸித்தி தேவதா
2. லஹிமா ஸித்தி தேவதா
3. மஹிமா ஸித்தி தேவதா
4. ஈஸித்வ ஸித்தி தேவதா
5. விஸித்வ ஸித்தி தேவதா
6. ப்ரகாம்ய ஸித்தி தேவதா
7. புத்தி ஸித்தி தேவதா
8. இச்சா ஸித்தி தேவதா
9. ப்ராப்தி ஸித்தி தேவதா
10. ஸர்வகாம ஸித்தி தேவதா. 

மாத்ருகை யோகினி தேவதைகள் 8 பேர் :

1. ப்ராஹ்மீ
2. மாஹேஸ்வரீ
3. கௌமாரீ
4. வைஷ்ணவீ
5. வாராஹீ
6. மாஹேந்த்ரீ
7. ந்ருஸிம்ஹீ
8. சாமுண்டீஸ்வரீ

ப்ரகடன யோகினி தேவதைகள் 10 பேர் :

1. ஸர்வ ஸம்ஷோபிணீ தேவதா
2. ஸர்வ வித்ராவிணீ தேவதா
3. ஸர்வ வஸங்கரீ தேவதா
4. ‌‍‌‌ஸர்வோன் மாதினி தேவதா
5. ஸர்வ மஹாங்குசை தேவதா
6. ஸர்வ கேசரீ தேவதா
7. ஸர்வ பீஜா தேவதா
8. ஸர்வ யோனி தேவதா
9. ஸர்வாகர்ஷணீ தேவதா
10. ஸர்வ த்ரிகண்டா தேவதா

மேலும் அம்பாளின் பரிவார தேவதா சக்திகளான
16 குப்த யோகினி கண தேவதைகளும்,
குப்த தர யோகினி கண தேவதாக்கள் 8 பேரும்,
ஸம்ப்ரதாய யோகினி கண தேவதாக்கள் 14 பேரும், குலோதீர்ண யோகினி கண தேவதாக்கள் 10 பேரும், நிகர்ப யோகினி கண தேவதாக்கள் 10 பேர் என அம்பாளைச் சுற்றி வீற்றிருப்பர்.

இதில் ஆவரண தேவதாக்கள் யாவரும் அம்பாளின் ஆதிநகரமான ஸ்ரீசக்ர யந்திரத்தில் அம்பாளைச் சுற்றி வீற்றிருப்பவர்கள் ஆவார்கள். ஸ்ரீ சக்ர பூஜையின் போது இவர்கள் எல்லோரையும் வணங்குவது சம்ப்ரதாயம் ஆகும்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ:

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top