பௌர்ணமி விரத பலன்களும் அதன் வழிமுறைகளும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பௌர்ணமி விரத பலன்களும் அதன் வழிமுறைகளும் பற்றிய பதிவுகள் :

வானில் முழுநிலவு பிரகாசமாய் காட்சியளிப்பதையே பௌர்ணமி. இந்த திருநாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம்மைச் சுற்றி நல்ல அதிர்வலைகள் ஏற்படும் மற்றும் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த பௌர்ணமி திருநாளில் சக்தி ஸ்வரூபமான அன்னை பராசக்தியை வழிபட்டு பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அம்பிகைக்குப் பூஜை செய்வதன் மூலம் அவரது அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

அதேபோல் குலதெய்வ கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டால் சந்ததி பலன்கள் கிடைக்கும். பொதுவாகப் பௌர்ணமி திருநாளில் அம்மனுக்கு வழிபாடு செய்வது வழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தன்று அம்மன் கோயில்களில் சிறப்புப் பூஜை, விளக்குப் பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். இந்நாளில் பெண்கள் விரதம் இருந்தால் அவரது குடும்பத்தினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மாதம் ஒருமுறை வரும் இந்த பௌர்ணமி திருநாளன்று பெண்கள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு விளக்கேற்றி நைவேத்தியம் படைக்க வேண்டும்.

மஞ்சள் அல்லது குங்குமம் கொண்டு 108 முறை அன்னை பராசக்தி மந்திரங்கள் செய்தால் மாங்கல்ய பலம் உண்டாகும்.

இந்த பௌர்ணமி திருநாளில் விரதம் ஏற்று வழிபட்டால் நீடித்த ஆயுள், எமபயம் நீங்கும், தன லாபம் அதிகமாகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top