ஆதித்ய ஹ்ருதயம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆதித்ய ஹ்ருதயம் பற்றிய பதிவுகள் :

நான் ஒரு சாதாரண மனிதன் என்றே தன்னை பற்றிக் கூறிக்கொண்ட ஸ்ரீராம பிரானுக்கு ராம ராவண யுத்தத்தைக் காண வந்த அகத்தியரால் உபதேசிக்கப்பட்டது இந்த 'ஆதித்ய ஹ்ருதயம்.' 

"இது புண்ணியம் வாய்ந்தது. எல்லாப் பகைவர்களையும் அழிப்பது. வெற்றியை அளிப்பது. மங்களம் நிறைந்தது. பாவங்களை நீக்குவது. கவலையும், துன்பத்தையும் போக்குவது, ஆயுளை வளர்ப்பது, மூன்று முறை இதை நீ ஜபித்தால் ராவணனை வெற்றி கொள்வாய்" என்று அகத்திய முனிவரால் ஸ்ரீ ராமனுக்கு அருளப்பட்டது.

ஆபத்துக் காலங்களிலும், மிகுந்த கஷ்டங்களிலும், பயம் ஏற்படும் சமயங்களிலும் இதை பக்தியுடன் ஓதினால் துன்பங்கள் விலகும். உள்ளத்தில் தைரியம் உண்டாகும். உடலில் புதிய சக்தி பிறக்கும். பயங்களும், கிரஹ பீடைகளும் கஷ்டங்களும் விலகி விடும். சகல சௌபாக்யங்களும் கிடைக்கும். கண் பார்வை நன்றாகத் தெரியும். 

ஆதித்ய ஹ்ருதயம் தரும் பலன்கள் :

◆ புண்ய மயமான ஆதித்ய ஹ்ருதயம்.
◆ஸ ர்வ சத்ரு விநாசனம் (அனைத்து எதிரிக ளையும் அழிக்க வல்லது)
◆ ஜயாவஹம் (வெற்றி தருவது)
◆ அக்ஷய்யம் பரமம் சிவம் (அழிவற்ற உயர் மங்களத்தைத் தருவது)
◆ ஸர்வ மங்கள மாங்கல்யம் (எல்லா நலன்களையும் தருவது)
◆ ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
◆ சிந்தா சோக ப்ரஸமனம் (துயர், துயருறு சிந்தனைகளைப் போக்கவல்லது)
◆ ஆயுர்வர்த்தனம் உத்தமம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது) 

சூரியனின் ஆற்றலை, திறனை போற்றித் துதிக்கும் இதனை தினமும் பக்தியோடு பாராயணம் செய்து வந்தால் பகைகள் விலகும்; தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும். 

ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.

அகத்திய மகரிஷிக்கு உலகை பற்றி கவலை அதிகமாக ஏற்பட்டது. இப்போதே இப்படி அநீதிகள் தலைவிரித்தாடுகிறதே இனி போக போக எப்படி இருக்குமோ? என்ற கவலை பயத்தை கொடுத்தது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். 

அநியாயங்கள் பெருகாமல் அதை தடுப்பதும் தட்டி கேட்பதும் பெண்களாக தான் இருப்பார்கள். ஆகவே பராசக்தியிடம் முறையிடுவோம் என்ற எண்ணத்துடன் தேவியை அணுகி தன் மன கவலைகளை கூறினார் அகஸ்தியர்.

நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய ஹருதய“ த்திற்கு இருக்கிறது என்று கூறினாள் பராசக்தி.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முதலில் நல்லவர்களிடம் சொன்னால்தான் அது முழுமை அடையும் என்ற எண்ணத்தால் பல வருடம் ஆகியும் மந்திரத்தை வெளியிடாமல் பொறுமையாக இருந்தார் அகஸ்திய முனிவர்.

ஸ்ரீ ராமசந்திரர், இராவணனிடம் போர் செய்து கொண்டு இருந்தார். பல அம்புகளை ஏவியும் இராவணனை கொல்ல முடியாமல் மிகவும் மன வேதனையில் இருந்தார். இராவணனும் முடிவில்லாத போரினால் மயங்கி விழுந்தார். 

ஆனாலும் இராவணன் போரை நிறுத்துவதாக இல்லை. இன்னும் எத்தனை மணி நேரமோ, எத்தனை நாட்களோ இப்படி போரை தொடர்வது? என்ற விரக்தியின் எல்லைக்கே போனார் ஸ்ரீராமர். இறைவனாக இருந்தாலும் மனிதபிறவி எடுத்தால் விதியை அனுபவித்து தான் தீர வேண்டும்.

ஆனால் விதியை ஒரளவு மாற்றும் சக்தி முனிவர்களுக்கு இருக்கிறது என்பதால் தன் குருவாக நினைக்கும் அகத்தியரை மனதால் பிராத்தனை செய்தார். 

பிராத்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது போல் அகஸ்திய முனிவர் ஸ்ரீராமரின் முன்னே தோன்றி, “ராம உலக நன்மைக்காக பராசக்தி ஆதித்ய ஹிருதய மந்திரத்தை எனக்கு உபதேசித்தார். அதை உனக்கு உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை உச்சரித்தால் சகல நன்மைகளும், விரோதிகளை வீழ்த்தும் சக்தியும் கிடைக்கும்." என்றார் அகத்திய முனிவர்.

முனிவர் கூறியது போல் ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தார் ஸ்ரீ ராமசந்திரர். அதன் பலனாக அதிக சக்தியும், புத்துணர்ச்சி யோடும் இராவணனை வீழ்த்தினார். 

சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தால் வல்லவனுக்கு வல்லவனாகலாம் என்றார் சக்திதேவி.

" சர்வாத்மாவே சர்வேஸ்வரனே வேதங்களால் கூட உன்னை அறியமுடியாது. ஆதித்யனே வேத விற்பன்னர்கள் செய்யும்யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே உனக்கு நமஸ்காரம்." 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top