ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீ ராமேஸ்வரர் திருக்கோவில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீ ராமேஸ்வரர் திருக்கோவில் பற்றிய பதிவுகள் :

ஸ்ரீ இராமேஷ்வரர் (ஸ்ரீ ராமலிங்கம், ஸ்ரீராமநாதர்) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.

இராவணை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஷ்வரம் கரைக்கு வந்த ஸ்ரீ ராமர் மகரிஷிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து 22 தீர்த்தக்கிணறுகளை உருவாக்கி குளித்து ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தோஷம் நீங்க சிவாயலயம் பிரதிஷ்டை செய்து சிவலிங்கம் அபிஷேகம் செய்ய முடிவெடுத்தனர்.

அதன் படியே அனுமனை கயிலாயத்திற்கு அனுப்பி சிவலிங்கம் கொண்டு வருமாறு குறிப்பிட்ட தேதி மணி குறித்து இராமேஷ்வரத்திற்கு கொண்டு வருமாறு கூறினார் . அதன் படியே அனுமனும் கயிலாயம் சென்று சிவலிங்கம் கொண்டு வந்து கொண்டிருந்தார் .

குறிப்பிட்ட நாள் மணியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நேரமும் வந்தது . அனுமனைக்காணாது தவித்த சீதை உடனே மண்ணால் ஓர் சிவலிங்கம் பிடித்து வழிபாட்டை ஆராம்பித்தனர் அதையே தற்போதுள்ள இராமலிங்கம், இராமேஷ்வரர் என அழைக்கிறோம் .

ஐந்து நிமிடம் தாமதமாக வந்த அனுமன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை தொடங்கியதை அறிந்து கோபமுற்று மண்ணாலான இராமேஷ்வர லிங்கத்தை அகற்ற முயன்று முடியாததால் ஏமாற்றமடைந்தார் .

அனுமனின் கஷ்டமறிந்த ஸ்ரீராமர் மண்ணாலான இராமேஸ்வரர் அருகில் அனுமன் கொண்டு வந்த விசுவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுமன் கொண்டு வந்த விசுவ லிங்கத்திற்கு முதல் பூஜையும் இரண்டவதாக சீதா செய்த மண்ணாலான சிலைக்கும் பூஜிக்குமாறு கூறினார் 

இராமேஷ்வரத்தின் சிறப்புகள் : 

✓ ஸ்ரீ இராமனால் உருவாக்கப்பட்ட ஸ்தலம் .
பிரம்மஹத்தி முதலான 22தோஷங்களை நீங்கும் ஸ்தலம் .

✓ இந்தியாவில் உள்ள புண்ணியஸ்தலங்களில் தெற்கே அமைந்த உலக ஒரே புகழ் பெற்ற சிவஸ்தலம். 

✓ இராமேஷ்வரம் 12 ஜோதிலிங்களில் ஒன்று. 

✓ மூர்த்தி, தீர்த்தம் ,ஸ்தலம் ஆகிய முப்பெருமைகளை கொண்ட தலம் .

✓ இராமேஸ்வரத்தின் சேதுவின் படுக்கையில் அமைந்த தலம் . 

✓ ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீதிருஞானசம்பந்தர், ஸ்ரீ திருநாவுகரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

✓ சைவம், வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான ஸ்தலம் .

கால வரலாறு : 

இராமயணக்காலத்தில் தோன்றிய இராமேஷ்வரம் திருக்கோவில் ஓர் சித்தரின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும் 12 ஆம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரம பாகு என்பவரால் முதல் மூலஷ்தானம் துவங்கப்பட்டதாக கல்வெட்டுகள் இயம்புகின்றன.

மூலவர் ஸ்ரீ இராமநாத சுவாமி சன்னதி: 

முதல் பிரகாரத்தில் ஸ்ரீ இராமநாதர் எழுந்தருளியுள்ளார் . மணலால் சீதையால் ஊருவாக்கப்பெற்று இராமரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முதல் லிங்கமாகும் . 

ஸ்ரீ விசுவநாதர் சன்னதி:

அனுமனால் கயிலாயத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற லிங்கமாகும். ராமநாதர் சன்னதிக்கு வடக்குபுறம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமரின் கூற்றுப்படி இன்றும் முதலில் விசுவநாதர் சன்னதியில் முதல் பூஜை நடைபெறுவது கவனிக்கத்தக்கது.

ஸ்ரீவிசாலட்சி அம்பிகை சன்னதி:

விசுவநாதரின் தேவியாக விசாலாட்சி அம்பாள் இங்குள்ளார். முதல் பூஜை ஸ்ரீ விசுவநாதருடன் இணைந்து விசாலாட்சிதேவிக்கும் நடைபெறும். 

பர்வதவர்த்தினி அம்பிகை சன்னதி : 

ஸ்ரீஇராமநாத சுவாமிகளின் அம்பிகையான பர்வதவர்த்தினி அமைந்துள்ளது. சுவாமி சன்னதிக்கு வலப்புறம் அம்பிகை இருப்பது மிக விஷேசமாகும். இங்கு அந்த அமைப்பு உள்ளது. இங்குள்ள ஸ்ரீ சக்கரம் கண்டு வழிபட வேண்டிய ஒன்றாகும்.

திருக்கோவில் உட்பகுதியில் மேலும் காணவேண்டிய சன்னதிகள் : 

1. அருள்மிகு விக்னேஸ்வரர்
2. ஸ்ரீ சேதுமாதவர் 
3. ஸ்ரீ ஜோதிர்லிங்கம் 
4. ஸ்ரீ சஹஷ்கரலிங்கம்
5. ஸ்ரீ வஜ்ரேஷ்வரர்
6. ஸ்ரீ நடராஜர் 
7. பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி
8. ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் 
9. ஸ்ரீ ஆஞ்சநேயர் 
10. 63 நாயன்மார்கள் 
11. ஸ்ரீ சிவதுர்க்கை
12. ஸ்ரீ மகாலட்சுமி

நடராஜர் சன்னதி : 

உலகப்புகழ் கொண்ட நடராஜர் சன்னதி மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் உள்ள மூன்றாம் பிரகாரம் அதிசயிக்க தக்க ஒன்றாகும். இது சபாபதி சன்னதி எனவும் அழைக்கப்படும் .

18 சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி அருகே அமைந்துள்ளது. இவர் ஆதிஷேசன் அவதாரமென அழைக்கப்படுகிறார் . 

ஜோதிர்லிங்கம் விபீஷணரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அழகாக உள்ளது. திருக்கோவிலினுள் 22 தீர்த்தங்களும் மற்ற 31 தீர்த்தங்களும் திருக்கோவிலுக்கு வெளியே இராமேஸ்வரத்தை சுற்றி அமைந்து உள்ளது. எல்லா விசேச திருக்கோவில்களையும் போல 6 காலபூஜை நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top