புரட்டாசி மாத கார்த்திகை விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புரட்டாசி மாத கார்த்திகை விரதம் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி கார்த்திகை தினமான நாளை விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.

புரட்டாசி கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். திருமண தடை நீங்கும், பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது.

சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். 

செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் கார்த்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான். 

திருமணம் ஆகியும் நீண்ட நாட்கள் பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்மணிகள் தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமான தை கிருத்திகையில் தமிழ்கடவுள் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், குழந்தை செல்வம் கிடைக்கும்.

உப்பில்லா உணவு தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். 

பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. 

இது உயர்வாகவும் கருதப்படுகிறது. புரட்டாசி கார்த்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமணமாகாத பெண்கள் கன்யா மாதத்தில் (புரட்டாசி - ஐப்பசி) தங்களுக்கு முருகனைப் போல நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்று விரதம் இருப்பர். அதாவது தசரா பண்டிகை முடிந்த பின்னர் ஐப்பசி மாதத்தில் வரும் குமார பௌர்ணமி தினத்தில் இவ்விரதத்தை மேற்கொள்வர்.

அன்று அதிகாலை முதல் இரவு வரை எந்தவித உணவையும் உண்ணாமல் இருப்பர். சிலர் பால், பழம், இனிப்பு முதலியவற்றை மட்டுமே உண்பர். குமார பௌர்ணமி ஒரு நாள் மட்டுமன்றி மாதம் முழுவதும் விரதம் இருப்பதும் உண்டு.

இவர்கள் முந்தைய (புரட்டாசி) மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விரதத்தை தொடங்கி குமார பௌர்ணமியன்று விரதத்தை நிறைவு செய்வர். குறிப்பாக திருமணமாகாத இளம்பெண்கள் பௌர்ணமி நிலவையே கார்த்திகேயனாக நினைத்து வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top