அற்புத பலன்கள் தரும் எளிய கணபதி ஸ்லோகம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அற்புத பலன்கள் தரும் எளிய கணபதி ஸ்லோகம் பற்றிய பதிவுகள் :

முழு முதல் கடவுளான விநாயகரின் அவதார நாளாக விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி சனி கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்குபவர் விநாயகப் பெருமான். இவரை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருளக் கூடியவர் கணபதி.

விநாயகர் சதுர்த்தி அன்று இவரை சிறப்பாக வணங்குவது வழக்கம். பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் கீழே குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.

விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

விநாயகர் ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

கணபதி ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

விநாயகர் ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

நாம் விநாயகரை வணங்கும் போது அருகம்புல்லால் அர்ச்சனை செய்த படி இந்த மந்திரங்களை சொல்லி வணங்கினால் விநாயகரின் அருள் மிக சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அவரை வணங்கி நெற்றியில் கொட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top