2024 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்வதற்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்வதற்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய பதிவுகள் :

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் வீரத்தை வழங்கி, விருப்பங்களை நிறைவேற்றும் துர்கையை வழிபட வேண்டும். 

அடுத்த மூன்று நாட்கள் உலக வாழ்க்கைக்கான அனைத்து விதமான செல்வ நலன்களையும் வழங்கும் மஹாலட்சுமியை வழிபட வேண்டும். 

நிறைவாக வரும் மூன்று நாட்களில் ஞானத்தை வழங்கும் சரஸ்வதியை வழிபட வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

கல்வி, கலைகளுக்கு உரிய தெய்வமாக கருதப்படும் சரஸ்வதிக்குரிய வழிபாட்டினை நவராத்திரியின் நிறைவு நாளில் மேற்கொள்கிறோம். ஞானத்தை பெறுவதற்காக சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள், வெற்றியை பெறுவதற்கான விஜயதசமியை கொண்டாடுகிறோம்.

ஞான முதல்வனான விநாயகருக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் இந்த ஆண்டு ஞானத்தின் கடவுளான சரஸ்வதி தேவிக்குரிய பூஜை நாள் வருவது தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் நவராத்திரியின் நிறைவு நாள் அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

பெரும்பாலானவர்கள் விஜயதசமி அன்று தான் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வித்யாரம்பம் செய்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் தற்போது சரஸ்வதி பூஜை அன்றே பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், வித்யாரம்பமும் நடத்தப்படுகிறது. 

2024 சரஸ்வதி பூஜை அன்று வித்யாரம்பம் செய்ய உகந்த நேரம் :

காலை : 08.20 முதல் 10.20 வரை.

2024 விஜயதசமி அன்று வித்யாரம்பம் செய்ய உகந்த நேரம் :

காலை : 06:30 முதல் 08:30 வரை
மதியம் : 10:35 முதல் 01:20 வரை

2024 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் :

காலை : 08.20 முதல் 10.20 வரை
மதியம் : 12:00 முதல் 01.30 வரை
இரவு : 06 :00 முதல் 11:00 வரை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top