பங்குனி உத்திரம் என்பது தெய்வத் திருமணங்களின் திருநாள். இந்த நாளில் சிவபெருமான்–பார்வதி தேவி, முருகன்–தேவயானை, ராமர்–சீதா ஆகிய தெய்வ தம்பதிகளை வழிபடுவது மிகவும் சிறப்பு.
1. விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
2. சிவபெருமான் – பார்வதி துதி
பார்வதி தேவியின் கணவனே...
வேதத்தின் தலைவனே!
தவத்தின் பயனே,
தயை கூர்ந்தருள்வாய் நமசிவய!"
“தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
3. தெய்வத் திருமண மந்திரம்
கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் கிட்ட
கல்யாணம் ஆனவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க
பரமேஸ்வரா, பராசக்தி அருள் புரிவாயாக
4. முருகன் – தேவயானை துதி
ஓம் தேவயானை நாயகா போற்றி!
ஓம் தேவாதி தேவனே தண்டபாணி போற்றி!
ஓம் வள்ளி தேவயானை மணாளனே போற்றி!
ஓம் சுப்ரமண்யாய நமஹ போற்றி!
ஓம் கந்தனே கடம்பனே போற்றி!
5. சக்தி (அம்பாள்) மந்திரம்
ஓம் சக்தி ஓம்
ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
6. திருமண ஸௌபாக்கிய மந்திரம்
திருமண தடை நீங்க:
“மங்களம் தந்த மங்களே
மங்கைமார்க்கு அருள் புரிவாயே
திருமண பாக்கியம் தருவாயே”
7. சந்திர தியான மந்திரம் (மாலை நேரம்)
ஓம் சந்திராய நமஹ
8. தீப ஆராதனை மந்திரம்
தீபம் ஜோதி பரம்பொருள்
தெய்வ ஜோதி நமோ நமஹ
9. இறுதி பிரார்த்தனை
என் குடும்பம் வளம் பெற
என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க
எல்லா துன்பங்களும் நீங்க
இறைவா அருள் புரிவாயாக”
முக்கிய திருமண மந்திரங்கள்:
விவாஹ வர மந்திரம்:
"தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ ப்ரியவல்லப விவாஹம் தேஹிமே ஸீக்ரம் வாஸுதேவ நமோஸ்துதே"
- இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்தால் விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
சுயம்பரா பார்வதி மந்திரம்:
"ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகீஸ்வரி யோக பயங்கரி சகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா"
- இது பார்வதி தேவியை வேண்டிச் சொல்லப்படும் மூல மந்திரம்.
கல்யாண சுந்தரேஸ்வரர் மந்திரம்:
"ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வராய நமஹ"
- இதனைத் தொடர்ந்து ஜபித்து வர திருமணத்தடை நீங்கும்.
காமேஸ்வர ஸ்லோகம்:
"காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம: காம விஹாராய காம ரூபதராய ச மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா:".
எப்படி ஜபிக்க வேண்டும்?
✔ சுத்தமான இடத்தில் அமர்ந்து சொல்லவும்.
✔ மனதில் தெய்வத்தை தியானிக்கவும்.
✔ எண்ணிக்கை முக்கியமில்லை – பக்தி முக்கியம்.
✔ காலை & மாலை இரு நேரமும் சொல்லலாம்
பலன்கள்
✓ திருமண தடைகள் நீங்கும்
✓ குடும்ப அமைதி அதிகரிக்கும்
✓ தம்பதிகளுக்கு நல்ல ஒற்றுமை
✓ மன அமைதி மற்றும் ஆனந்தம்
✓ இறைவன் அருள் பெருகும்