ஆற்றுகால் பொங்கல் என்பது பெண்கள் மட்டுமே பெருமளவில் பங்கேற்று நடத்தும் ஒரு மகத்தான ஆன்மீக விழா. இந்த விழா, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுகால் பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி–பங்குனி மாதங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் “பெண்களின் சபரிமலை” எனவும் அழைக்கப்படுகிறது.
1997 ஆம் ஆண்டு, ஆற்றுகால் பொங்கல் திருவிழா உலகில் ஒரே நாளில் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட வழிபாடு என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
இன்றும் பல கோடி பெண்கள் – இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
ஆற்றுகால் அம்மன்:
கண்ணகி (சிலப்பதிகார நாயகி) அவதாரமாக பார்வதி, துர்கா, பத்ரகாளி சக்தி வடிவமாக
வழிபடப்படுகிறார். இவள் பெண்களின் துன்பங்களை தீர்ப்பவள். குடும்ப நலன், குழந்தை பாக்கியம், திருமண வரம் அருள்பவள்.
விழாவின் முக்கிய நாளான பொங்கல் தினம், பெண்கள் தங்கள் இல்லங்களின் முன்பும், தெருக்களிலும், கோவில் சுற்றுவட்டாரங்களிலும் மண் பானை, அரிசி, வெல்லம், தேங்காய், நெய் கொண்டு அம்மனுக்கு பொங்கல் சமைத்து நிவேதனம் செய்கிறார்கள்.
அடுப்பிலிருந்து பொங்கல் கொதித்து பொங்கி வழிந்தால் அது அம்மன் அருள் நிறைந்த அடையாளம் எனக் கருதப்படுகிறது.
விழாவின் இறுதியில் குத்தியோட்டம் (புனித நடை) கும்ப ஆராதனை நடைபெறும்
இதன் மூலம் விழா நிறைவு பெறுகிறது.
ஆற்றுகால் பொங்கலின் ஆன்மீக சிறப்புகள்
✔ பெண்களின் மன வலிமை அதிகரிக்கும்.
✔ குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி.
✔ திருமண தடை, சந்தான தடை நீங்கும்.
✔ நோய், மனஅழுத்தம் குறையும்.
✔ சக்தி வழிபாட்டின் உச்ச வெளிப்பாடு.
சமூக ஒற்றுமையின் அடையாளம்
ஆற்றுகால் பொங்காலை சாதி, மதம், மொழி வேறுபாடுகள் இன்றி பெண்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் உலகிற்கு பெண் சக்தியின் பெருமையை உணர்த்தும் விழாவாக திகழ்கிறது.
ஆற்றுகால் பொங்கல் என்பது ஒரு திருவிழா மட்டுமல்ல — அது பெண் சக்தியின் பேரழகு, நம்பிக்கையின் உச்சம், ஆன்மீக ஒற்றுமையின் உலக சின்னம்.
ஆற்றுகால் அம்மனின் அருளால் அனைத்து பெண்களும் சக்தியுடன், சாந்தியுடன், செழிப்புடன் வாழ்வார்களாக!
