ராம நவமி – வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராம நவமி – வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பற்றிய பதிவுகள் :

ராம நவமி என்பது மிகப் புனிதமான திருநாள்களில் ஒன்றாகும். இந்த நாள், ஸ்ரீ ராமரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.

ராம நவமியின் வரலாறு ராமாயணம் என்னும் இதிகாசத்தில் விரிவாக விவரிக்கப்படுகிறது.

அயோத்தி நாட்டின் அரசராக இருந்த தசரத மன்னன் அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அதனால், அவர் புத்திர காமேஷ்டி யாகம் யாகம் செய்தார்.

யாகம் முடிந்த பின், தேவர்கள் அருளால் ஒரு பாயசம் கிடைத்தது. அதை தனது மூன்று மனைவிகளான கௌசல்யா, கைகேயி, சுமித்ரா அவர்களுக்கு அளித்தார்.

அதன் பலனாக கௌசல்யாவுக்கு ஸ்ரீ ராமர், கைகேயிக்கு பரதன், சுமித்ராவுக்கு லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் பிறந்தனர்.

இதில், ஸ்ரீ ராமர் மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். அவர் உலகத்தில் தர்மத்தை நிலைநிறுத்தவும், தீமையை அழிக்கவும் பிறந்தார்.

ராமாயணம் படி, ராமர் தர்மம் காக்கும் அரசன், சிறந்த மகன், நல்ல கணவன், உண்மையான நண்பன்.

அவர் ராவணனை அழித்தார், சீதா தேவியை மீட்டார், உலகத்திற்கு நல்லொழுக்கம் கற்றுக் கொடுத்தார்.

ராம நவமி கொண்டாட்டம்

இந்த நாளில் மக்கள் கோயில்களுக்கு சென்று ஸ்ரீ ராமர் வழிபாடு செய்கின்றனர். ராமாயணம் பாராயணம் செய்கின்றனர். "ஸ்ரீ ராம ஜெயம்" என ஜபம் செய்கின்றனர். சிலர் விரதம் இருப்பார்கள்

சில இடங்களில் ராமர் பிறந்த நேரமான மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ராம நவமி நமக்கு சொல்லும் முக்கியமான பாடங்கள்:

• தர்மம் எப்போதும் வெல்லும்

• பொறுமை மற்றும் நேர்மை முக்கியம்

• கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் வாழ்க்கை சிறக்கும்.

ராம நவமி என்பது ஒரு திருநாள் மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல் பாடமாகும். ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மனிதர்களுக்கு தர்மம், ஒழுக்கம் மற்றும் பக்தி என்ன என்பதை உணர்த்துகிறது.

இந்த நாளில் அவரை மனமார வழிபட்டால், குடும்பத்தில் அமைதி, நலன், ஆனந்தம் ஆகியவை பெருகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top