திரு அப்பாலும் அடிச்சார்ந்தார்
அப்பாலும் அடிச்சார்ந்தார் என்று திருநாமம் பூண்டவர்கள் திருத்தொண்டத் தொகையில் அடங்காத ஏனைய சிவனருட் செல்வர்கள் ஆவர் என்று அனைவரையும் போற்றியுள்ளார் சுந்தரர். மூவேந்தர்கள் ஆண்ட தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு மண்டலங்களிலும் முக்கண்ணன் பாதகமலங்களைப் பணிவோரும் இத்தொகையில் சேர்வார்கள். 

திருத்தொண்டத் தொகையில் வரும் நாயன்மார்களுக்கு முற்பட்டு வாழ்ந்த சிவனடியார்களும், அடிச்சார்ந்தார் ஆவர். சிவனாரின் திருவடியை வழிபடுவோர் அனைவருமே அப்பாலும் அடிச்சார்ந்தார் என்ற தொகையடியாருக்குள் அடங்கிவிடுகிறார். சேக்கிழார் இவ்வுண்மையைப் பாடலால் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்தி அருளுகிறார்.

Post a Comment

Previous Post Next Post