முப்போதும் திருமேனி தீண்டுவார்
சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள் எம்பெருமானால் அருளிச் செய்யப் பெற்ற இருபத்தி எட்டு ஆகமங்கள் ஆகும். கோயில்களில் இவ்வாகம வழியே நித்திய நைமித்திக வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்! இத்தகைய, ஆகம முறைப்படி வழிபாடு புரிதற்குரிய பெரும் பேற்றை பெற்றவர்கள் ஆதி சைவர்கள். முப்போதும் முக்கண்ணர் திருவடியைப் பூசிக்கும் இனியவர். 

திருமஞ்சனம் செய்து பூ மலரைக் கொட்டிக் குவித்துப் போற்றும் ஆதி சைவர்களே இறைவனின் திருமேனியினைத் தீண்டும் உரிமையையும் பெற்று உய்பவர்கள் ஆவார்கள். வழி வழியாக வேதாகமங்களை ஓதுபவர்கள். இச்சைவ அந்தண குலத்தார் திருக்கோயில்களில் சிவலிங்க பூசை புரியும் பெருமையைப் புகழ்ந்துரைப்பது என்பது அரியதாகும். இவர்களுடைய பெருமையும் புகழும் போற்றுதற்குரிய அருட் செயலாகும்.

Post a Comment

Previous Post Next Post