திருவாரூர் பிறந்தார்
அருவம் ஆகியும்,
உருவம் ஆகியும், எப்பொருளும் ஆகி நிற்கின்ற இறைவன் அருள்
ஒளியோடு எழுந்தருளி இருக்கும் திருவாரூரில் பிறந்தவர்கள் யாவருமே சிவகணத்தைச்
சேர்ந்தவர்கள் ஆவர். திருவாரூர் என்னும் திருத்தலம் முக்தி பெறுவதற்கு நல்ல
மார்க்கத்தை அளிக்கும் ஞான வயல் ! அந்த அளவிற்கு சைவர்கள், திருவாரூரில் பிறந்தாலே போது முக்தி கிடைக்கும்
என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
திருவாரூரில் பிறந்தவர்கள் அன்பிலும்
பக்தியிலும் அரனார் வழிபாட்டிலும் மிகமிகச் சிறந்து விளங்கினர். தியாகராசப்
பெருமான் திருவாரூரில் எழுந்தருளி உலகிற்கு ஞான வாசனையை அருளுகிறார். திருவாரூர்
பெருமான் கொடையிற் சிறந்தவர். சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாட திருவாரூர்ச்
சிவனடியார்கள்தான் மூலகாரணம் ஆவார்கள். இவ்வாறு திருவாரூரில் பிறந்தவர்களுடைய
சிறப்பையும், பெருமையையும்
ஒருவராலும் உரைக்க உண்ணாது என்று உரைக்கிறார் சேக்கிழார் பெருமான். உலகை
உய்விக்கும் பொருட்டு, பெருமைமிக்கத்
திருவாரூரில் பிறந்த சிவகணத்தவர்கள் திருநாமம் போற்றிப் பணிவோமாக!