சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
சிவபெருமானுடைய
திரு உருவத்தை யோக நெறியாலே சித்தத்திலே வைத்துப் பிற நினைவுகளைத் தடுத்து இகத்
தெளிவைக் காணும் ஆற்றல் பெற்ற அருந்தவத்தினர் இத்தொகை அடியார்கள்! இவர்கள் தத்துவங்கள்
எல்லாவற்றையும் கடந்தவர்.
ஞான நெறிகளின் மேல் காண்கின்ற எல்லா ஒளிகளுக்கும் மேலான
நிலையில் மனத்தை நிறுத்தியவர். சித்தம் சிதறாமல் ஒரு மனமாய் நின்று இறைவனின்
திருவருட் கருணையால் நெஞ்சத்தைக் கட்டுப்படுத்துவதுபவர்கள். சித்தத்தை சிவன்பாலே
வைத்தராகிய தொகை அடியார்களைப் போற்றி வழிபடுதலையே இம்மையில் நாம் பெற்ற பெரும்
பேறாக எண்ணி மகிழ்தல் வேண்டும்