சிவபுராணம் பாடல் 12விலங்கும் மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

பொருள்:


ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்

கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற

நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,

இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,

உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,

நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்

பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

குறிப்பு:


1.      கேவலமான நிலையில் நாம் இருப்பினும் இறைவன் திருவருள் நம்முடைய இழிவு கண்டு புறம் தள்ளாது, அளத்தலுக்கு இயலாத கருணையினால் நம்மை ஆண்டு கொண்டருளும் வண்ணம் இங்கு தொழப் படுகின்றது.


திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

Previous Post Next Post