சிவபுராணம் பாடல் 11

0

சிவபுராணம் பாடல் 11வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
 

பொருள்:


கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை

மறைத்து மூடிய மாயையாகிய இருளினை

செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி,

மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,

அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,

மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு

மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,

 

குறிப்பு:


1.      உடலின் கட்டுமானம் விவரிக்கப் படுகிறது.


திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top