சிவபுராணம் பாடல் 10

0

சிவபுராணம் பாடல் 10



கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் ......

 

பொருள்:


அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ

அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,

இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !

ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக

மறைந்திருந்தாய், எம்பெருமானே !

குறிப்பு:


1.      வினை நிறைந்த பிறப்பினால் அவதிப்படும் ஆன்மாக்களில் அன்பினால் இறைவன் திருவடி பற்றுபவர்களுக்குக் கடினமான முறைகளினால் அல்ல, மிகவும் எளிதாகவும் தேனினும் இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான்.


திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top