சுக்ரீஸ்வரர் கோவில்

0
திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவிற்கு கிடைத்த சில தகவல்கள் :




திருப்பூர் மாவட்டத்தில் கூலிபாளையம் என்ற ஊரில் (வித்ய விகாஸ் பள்ளிக்கு நேர் பின்பு) இந்த சுக்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான கோவில் ஆகும்.

இந்த புகழ் பெற்ற ஆலயம் தற்போது இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருக்கிறது..

இதன் ஆலயத்தின் சிறப்புகள் :


 • இரண்டு நந்திகளைக் கொண்ட கோவில்.

 • ஐந்து லிங்கம் வெவ்வேறு திசையில் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் சரியாக இந்த லிங்கங்களில் ஒன்றன்பின் பின் ஒன்றாக விழும்.

 • இங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த பாதையில் குதிரையில் சென்றால் கோவை பேரூரை அடையலாம் என்று இந்திய அகழ்வாராய்ச்சி துறையினரால் கூறப்படுகிறது.

 • இந்த கோவிலின் அடியில் மிகப்பெரிய கோவில் புதையுண்டுள்ளது என்று இந்திய அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் கூறகின்றனர்.

இக்கோவிலின் வரலாறு:


சுக்ரீவர் ராவணனை அளிக்க செல்லும் முன் இக்கோவிலை எழுப்பி ஈசனிடம் ஆசி பெற்ற பின் ராமர் அணியில் சேர்ந்தார் என்பது வரலாறு.

நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் மேலும் தொடரும்.


ஓம் நமசிவாய



Tags :

Chukreesvarar , temple , thirupur , old temple

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top