ருத்ராட்சம் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு அறிமுகம் :உலகின் படைப்புகள் அனைத்தையும் சிவனின் அம்சமாகவே பாவிப்பது சைவ சமயத்தின் சித்தாந்தம் ஆகும். சிவபெருமானை தங்களின் முழுமுதல் நாயகனாக ஏற்று யோகம், தியானம் போன்றவை மூலம் சிவ அனுபவத்தை பெற முயலும் ஆன்மீக சாதகர்கள் பயன்படுத்தும் சிவ அம்சம் கொண்ட ஒரு பொருளாக “ருத்ராட்சம்”  இருக்கிறது.

ருத்ராட்சம் என்பது இமய மலை பகுதிகளில் வளரும் ருத்ராட்ச மரத்தில் விளையும் ருத்ராட்ச பழத்தின் விதையாகும். ருத்ராட்சம் சிறந்த மருத்துவ குணங்களையும்,தாந்திரீக சக்திகளை வெளிப்படுத்தும் ஒரு பொருளாக இருப்பதால் பல நூற்றாண்டுகளாக இந்து மற்றும் புத்த மத துறவிகள் தங்களின் ஆன்மீக சாதனைகளுக்கு ருத்ராட்சங்களை பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

ருத்ராட்சத்தில் கோடுகளால் பிரிந்த பகுதி முகம் எனப்படும். ருத்ராட்சத்தில் குறைந்த பட்சம் 3 முகத்தில் தொடங்கி அபூர்வமான 11 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் வரை இருக்கிறது.

ஞானம் எனும் உயரிய அனுபவத்தை பெற கடுந்தவம் புரிபவர்கள் யோகிகள், துறவிகள் ஆவர். இவர்கள் அனைவரும் வழிபடும் இறைவனாக சிவபெருமான் இருக்கிறார். அந்த சிவபெருமானின் கடாட்சம் நிறைந்ததாக கருதப்படுவதும், சிவனடியார்களால் அணியப்படும் ஒரு ஆன்மீக அணிகலனாக ருத்ராட்சம் இருக்கிறது.

ருத்ராட்சம் என்பது ஒரு மூலிகை மரத்தின் காய்ந்த விதைகளாகும். இத்தகைய மரங்கள் குளிர்ந்த பகுதிகளில் குறிப்பாக இந்திய – நேபாள நாட்டின் இமய மலை பகுதிகளில் அதிகம் விளைகின்றன. ருத்ராட்சத்தின் முகம் எனப்படும் பிரிவுகள் எத்தனை இருக்கிறதோ அதற்கேற்ற சக்திகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

விஞ்ஞான பூர்வமான பல நடைமுறைகளை கொண்டது இந்து மதம். இதில் இருக்கும் நடைமுறைகள் அனைத்திற்குமே பல வகையான பலன்கள் இருக்கும்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்களில் ஆன்மீகமும், அறிவியலும் சேர்ந்தே இருந்தன. அப்படி அவர்கள் அதிகம் உபயோகித்த ஒரு தெய்வீகமான பொருள் தான் ருத்ராட்சம் ருத்ராட்சத்தில் பல வகைகள் உள்ளன.

சைவர்கள் சிவ பெருமானை வழிபாடு செய்யும் காலங்களில் தங்களின் உடலில் சிவ சக்தி கொண்ட ருத்ராட்சம் அணிவது அவசியம் என்று சைவ சம்பிரதாய விதிகள் கூறுகின்றன.

மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் அடுத்த பதிப்பில் ருத்ராட்சத்தின் பலன்கள் பற்றியும் எந்த முக ருத்ராட்சம் யார் அணிய வேண்டும் என்பது பற்றியும் பதிவிடுகிறோம்.

மேலும், இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

ஓம் நமசிவாய
Tags :

rutrasam , rutrasham , mugam

Post a Comment

Previous Post Next Post