ருத்திராட்சம் என்பது என்ன என்றும், அதை அணியும் விதிமுறைகள் பற்றியும் நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிப்புகள் :
ருத்திராட்சம் என்பது சிவன் அடியார்களின் அடையாளம். ருத்திராட்ச மரத்தில் இருந்து கிடைக்கும் காய் தான் ருத்திராட்சம் என்று அழைக்கப் படுகிறது.
இதனை தெய்வமணி, அக்குமணி என்றும் அழைப்பர். ருத்திரன் என்பது சிவனையும் அக்ஷம் என்பது கண்ணீர் துளிகளையும் குறிக்கிறது.
அதாவது நெடுங்கால தவத்தின் பிறகு கண்களை திறக்கும் போது சிவனின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் துளிகளே ருத்ராக்ஷம் என்று அழைக்கப்படுகிறது.
சைவர்கள் ருத்திராட்சம் அணிவது பல காலங்களாக நடைமுறையில் இருக்கும் பாரம்பரியம்.
ஆண் பெண் பேதமின்றி யார் வேண்டுமானாலும் ருத்திராட்சத்தை அணியலாம். ஆனால் அதை அணிவதெற்கென்று சில வரைமுறைகள் உள்ளது அதைப் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் இந்த பதிப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.
ருத்திராட்சத்தை அணிவதற்கு முன் பின்பற்றவேண்டியவை
• முதலில் தங்களின் விருப்பத்திற்கேற்ப தேவையான ருத்ராட்ச மாலையினை வாங்க வேண்டும்.
• ருத்திராட்சத்தை முதலில் ஒரு வார காலம் சுத்தமான பசுநெய்யில் ஊறவைக்க வேண்டும்.
• பின்பு அதனை எலுமிச்சையிலும், நீரிலும் சுத்தம் செய்ய வேண்டும்.
• அதன் பின்னர் திருநீற்றில் (விபூதி) ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
• அடுத்ததாக பசும்பாலில் சுத்தம் செய்ய வேண்டும்.
• அதன்பின் தூயநீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
• இறுதியில் அருகிலுள்ள சிவ ஆலயம் சென்று சிவபாதத்தில் வைத்து பூஜைகள் செய்து சிவ அடியார்களின் மூலம் அணிய வேண்டும்.
ருத்திராட்சத்தை அணிவதற்கான நேரம்
ருத்திராட்சத்தை அணிவதால் ஏற்படும் நன்மைகள் பல ஆனால் அவற்றை அணிய உரிய காலம் இருக்கின்றது.
குறிப்பாக பிரதோஷ காலப்பொழுது ருத்திராட்சத்தை அணிவது சிறப்பு.
ருத்திரதச்சத்தில் ஒரு முகம் முதல் பல முகங்களை கொண்ட ருத்ராத்சங்கள் இருக்கின்றது. அவற்றைப் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் அடுத்த பதிப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஓம் நமசிவாய
Tags :
Rutrasam , ruteasham , time , neram , anniyum , vethimurai