தமிழ் புத்தாண்டான விகாரி வருடத்தில் எந்த ராசிக்காரர்கள் என்ன வழிபாடு செய்ய வேண்டும்

2

தமிழ் புத்தாண்டான விகாரி வருடத்தில் எந்த ராசிக்காரர்கள் என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்பது பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிவுகள் :

மேஷம் புதன்கிழமைதோறும் பெருமாளை தரிசித்து வருவதால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் தினமும் விநாயகரை வழிபட்டு வர தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மிதுனம் செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கடகம் வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சிம்மம் ஞாயிறுதோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வரவும். கன்னி புதன்கிழமைதோறும் வராக பெருமானை வழிபட்டு வருவதால் தொழில் மற்றும் சிந்தனை சார்ந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். துலாம் செவ்வாய்க்கிழமைதோறும் செண்பக மலர்களால் முருகரை வழிபட்டு வர சுபிட்சமான சூழல் உண்டாகும். விருச்சகம் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர பொருளாதார மேன்மையும், ஆதரவும் உண்டாகும். தனுசு குருமார்களை வியாழக்கிழமைதோறும் வணங்கி வர மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகரம் சனிக்கிழமைதோறும் ஜீவசமாதி சென்று வழிபட்டு வரவும். கும்பம் புதன்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு வர எண்ணத் தெளிவு உண்டாகும். மீனம் காவல் தெய்வங்களை வழிபட்டு வர தொழில் சார்ந்த இன்னல்கள் அகலும். ஓம் நமசிவாய

Post a Comment

2 Comments
  1. Good morning we are grateful to inform we are one of the leading madia sponsors in South India sir we want be a part of your progets to promote the madia sponsors we need officel promotes letter passable send your reply through massage by pandurangaan p.s.v.r.madia communication Salem Tamil Nadu kindly send your reply through massage by

    ReplyDelete
    Replies
    1. ஆன்மீக சேவையில் நிச்சயமாக எங்கள் பங்களிப்பு இருக்கும்.

      Delete
Post a Comment
To Top