ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் விபூதி (திருநீர்) அணிவதற்கு முன் ஓத வேண்டிய பதிகம் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிப்பு :
மதுரையை ஆட்சிசெய்த கூன் பாண்டியன் ஒரு சமயம் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டுத் தவித்தான். அப்போது அவன் பின்பற்றிய சமண மதத்தினர் சொன்ன மந்திரங்களாலும் பலரும் அளித்த வைத்தியத்தாலும் பலன் எதுவும் கிட்டாது வருந்தினான்.

அந்த சமயத்தில் ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் என்ற துதியைப்பாடி, சிவபெருமானின் திருநீற்றுப் பிரசாதத்தில் சிறிதினை மன்னனின் வயிற்றில் பூசினார். அடுத்த கணமே, அரசனின் வெப்பு நோய் விலகி, வெம்மை தணிந்து, குளுமை நிறைந்தது. மகிழ்ந்த அம்மன்னன், உடனடியாக சைவத்திற்குத் திரும்பினான் என்கிறது வரலாறு.

உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்ப நோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும்.

முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லிவந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும்.  சிறிது விபூதியை சுவாமி முன் வைத்து, இந்தப் பதிகத்தை ஓதியபின் அந்த விபூதியை, பாதிக்கப்பட்டவர்க்குப் பூசிவிடுவதாலும் பலன் கிடைக்கும். மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் அடுத்த பதிவில் விபூதி அணியும் முறையையும் பதிவிடுகிறோம்.


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய் உமைபங்கன் திருஆலவாயான் திருநீறே.

பொருளுரை: 


சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

ஓம் நமசிவாய
Tags :

Vebuthi , thiruneeru , mandram , aarokyam

Post a Comment

Previous Post Next Post