மஹாவிஷ்னுவின் வராஹ அவதாரம் குறித்து நமது ஓம் நமசிவாய குழுவில் சிறு பதிவு :
தீமைகளை அழித்து நன்மைகளைக் காக்க திருமால் வராஹர் வடிவமெடுத்த அவதாரமே வராஹ அவதாரம் !
திருமாலின் மூன்றாவது அவதாரம், வராஹர் வடிவம் !
பூமியைக் கவர்ந்து சென்ற இரணியாட்சனை போரிட்டு வென்ற அவதாரமே வராஹ அவதாரம் !
நான்முகனின் நாசியில் இருந்து வெண்பன்றி வடிவாக வெளிவந்த நாராயணன், பூமாதேவியைக் காப்பதற்கும், உலகில் தீயவை அழியவும் அவதரித்தார் !
தேவாதிதேவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, பூமாதேவியின் வேண்டுதலுக்காகத் திருவுளம்கொண்டு அரக்கனான இரண்யாட்சனை வதம்செய்து, வராஹமூர்த்தி பூமியில் நிலை கொண்டார் !
வராஹ வடிவம்கொண்டு திருமால் பூமிக்கு வந்த நாளே, வராஹ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது !
ஸ்ரீமுஷ்ணம், திருவிடந்தை, கல்லிடைக்குறிச்சி, கும்பகோணம், திருக்கூடலூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள வராஹ மூர்த்தி தலங்களில், இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது !
திருமாலின் முழுமையான வடிவம் என்பதால், ஆதிவராஹர் என்றும், பூமியைக் காத்ததால் பூவராஹர் என்றும் இவர் போற்றப்படுகிறார் !
பூமியில் நன்மைகள் ஓங்கி, தீமைகள் ஒழிய வராஹமூர்த்தியின் வடிவமே ஆதியில் உருவானதால், எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் வராஹருக்கு முதல் வழிபாட்டை நடத்திய பிறகே, அந்த ஆலய மூர்த்திகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது !
வராஹ ஜயந்தி நாளில் கோரைக்கிழங்கு மாவுருண்டை செய்து படைத்து, செவ்வரளி, துளசி மாலைகள் சார்த்தி, வராஹ மந்திரம் சொல்லி வழிபட்டால், எல்லா தீமைகளும் விலகி சுபிட்சம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை !
ஓம் நமசிவாய
Tags :
Vishnu , mahavishnu , varaga , avatharam