அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய திருமூலர் திருமந்திரமும் அதன் பொருளும் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவில் சிறு பதிவு :
சிவ சிவ என்கிலர் தீ வினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.
_ திருமூலர் திருமந்திரம்
பாடலின் பொருள் :
"சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்"
ஆதாவது, முப்பிறவியின் தீய வினை செய்து இப்பிறப்பிலும் பாவங்கள் செய்து வருபவர் நாவில் "சிவ சிவ" என்ற சொல் வராது...
"சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்"
அவ்வாறு பாவ செயல் செய்து வருபவர் "சிவ சிவ" என்று சொல்லிவிட்டால்.... அவர்கள் தீய வினைகள் எரிந்து விடும். மேலும் அவர்களை பாவங்கள் செய்யாமல் தடுக்கும்.
"சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்"
இவ்வாறு பாவங்கள் செய்ய விடாமல்,.... நன்மைகள் பல புரிய செய்து.. . தேவர்கள் ஆவார்கள்.
"சிவ சிவ என்னச் சிவகதி தானே"
தேவர்கள் ஆன பின்... "சிவ சிவ" என்றே பேரானந்தத்தில் சிவத்தில் ஆன்மா ஒடுங்கும்
திருச்சிற்றம்பலம்...
ஓம் நமசிவாய
Tags :
Thirumoolar , thirumular , thiru , thirumandram