பிரதோஷ விரதம்

0

பிரதோஷ விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிப்புகள் :





சிவனை பழிப்பட உகந்த நாள் என்பது பிரதோஷ நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்து விலகும்.

தினமும் தவ கோலத்தில் இருக்கும் நந்தி தேவன் பிரதோஷ நாளன்று பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டும் தன்னுடைய தவத்தை களைத்து சிவனை நோக்கி விரதம் இருப்பவர்களின் கோரிக்கையை கேட்டு அதை நிறைவேற்றுவார்.


பிரதோஷம் என்பது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

•  வளர்பிறை பிரதோஷம்

•  தேய்பிறை பிரதோஷம்


பிரதோஷ விரதம் இருக்கும் முறை :


பிரதோஷ விரதம் இருப்பவர்கள் அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் பூஜை அறையில் விளக்கேற்றி தனது விரதத்தினை தொடங்க வேண்டும்.

அன்று நாள் முழுவதும் “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபித்தப்படி இருக்க வேண்டும். முடிந்ந வரை சிவபுராணம் பாராயணம் செய்வது நன்று.

மாலை வேலையில் நிச்சயமாக அருகிலுள்ள சிவ ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

சிவன் கோயிலிற்கு சென்று தங்களால் முடிந்தால் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலைச் சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

தம்மால் இயன்ற அளவிற்கு இளநீர், பன்னீர், சுத்தமான பசும்பால், தயிர், பூக்கள் அல்லது பூஜைக்கு தேவையான ஏதாவது ஒரு பொருள் கொண்டு செல்வதும் நன்று.

அந்த பிரதோஷம் நாம் முன்னின்று நடத்துவது என்பது கோடி புண்ணியம்.

நந்தி தேவரிடமும் நமது குறைகள் அனைத்தையும் சிவபெருமானிடம் சொல்லி தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். பிரதோஷ விரதத்தினை முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும்.

அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம்.

கடவுள்களுக்கு குறிப்பாக சிவபெருமானுக்கு விரதம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஏழைக்காவது அன்னதானம் செய்தால் மட்டுமே அந்த விரதத்தின் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.


ஓம் நமசிவாய




Tags :

Pradhosam , prathosam , veratham 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top