நான்கு முக ருத்ராட்சத்தின் பலன்கள்

0

நான்கு முக ருத்ராட்சத்தின் பலன்கள் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிவு :
வலிப்பு மற்றும் மன நோய் உடையவர்கள் 4 முக ருத்ராட்சத்தை அணிந்துக்கொள்ளலாம். 4 முக ருத்ராட்சம் ஞாபக மறதி ஏற்படுவதை வெகுவாக குறைகிறது.


இதய பாதிப்புகள்


பதட்டமான விடயங்களை பார்க்கும் போதும், கேட்கும் போதும் இதயத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது இயல்பானது தான். ஆனால் இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் நான்கு முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது.

சிறுநீரகம்


உடலில் படபடப்பு மற்றும் பயம் போன்ற உணர்வுகள் இதயத்தை பாதிக்கு அதே அளவிற்கு சிறுநீரகங்களையும் பாதிக்கிறது. மேற்கண்ட உணர்வுகள் அதிகம் ஏற்படுபவர்கள் மற்றும் சிறுநீரகங்கள் பலம் பெற நினைப்பவர்கள் நான்கு முக ருத்ரட்சத்தை தங்களின் உடலில் எப்போதும் அணிந்து கொண்டிருப்பதால் சிறுநீரகங்கள் வலுப்பெறுவதோடு சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் நீக்கும்.

சோம்பல் குணம்


பலருக்கும் இன்றைய காலத்தில் இரவில் நெடுநேரம் விழித்திருந்து பகலில் நெடுநேரம் உறங்கும் பழக்கம் இருக்கிறது. இது நாளாவட்டத்தில் அந்த நபர்களின் உடல் மற்றும் மனதில் மிகுந்த சோம்பலை உண்டாக்குகிறது. இப்படிப்பட்ட நபர்கள் நான்கு முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் அவர்களுக்கு தூக்கம் அளவாக இருக்கும். சோம்பல் குணத்தை போக்கி மிகுந்த உற்சாகத்தையும் சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

பித்தப்பை, கல்லீரல்


உணவுகளை நன்கு செரிமானம் செய்வதற்கு கல்லீரல் மற்றும் பித்த பையில் இருந்து சுரக்கும் பித்த நீர் ஆகியவை முறையாக இயங்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த உறுப்புகளின் செயல்பாடுகளிலும் சுணக்கம் ஏற்பட்டு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் பித்தப்பை, கல்லீரல் உறுப்புகளின் செயல்பாடுகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

தைரொய்ட் பிரச்னைகள்


நமது தொண்டையில் இருக்கிறது தைரொய்ட் எனப்படும் நாளமில்லா சுரப்பி. இது தைராக்சின் எனப்படும் ஒரு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடலின் இதயத்துடிப்பு மற்றும் ஜீரணம் சம்பந்தமான செயல்பாடுகளை சரி செய்கிறது. இந்த தைராக்சின் ஹார்மோன் அளவுக்கதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரந்தால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படிப்பட்டவர்கள் 4 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் தைரொய்ட் சம்பந்தமான பாதிப்புகள் குறைந்து தைரொய்ட் சுரப்பியின் செயல்பாடு சரியாகும்.

குழந்தைகள்


ஐந்து வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகளுக்கு நோய்களால் பாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் இருக்கிறது. நேர்மறையான அதிர்வுகளை அதிகம் வெளிப்படுத்தும் நான்கு முக ருத்ராட்சத்தை குழந்தைகளுக்கு அணிவிப்பதன் மூலம் அவர்கள் அடிக்கடி நோய்பாதிப்புகளுக்கு ஆளாகாமல் காக்கும். குழந்தைகளின் சீரான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கும் உதவும்.

கல்வி


4 முக ருத்ராட்சத்தை பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் அணிந்து கொள்வதால் அவர்களால் கல்வியில் நன்கு கவனம் செலுத்தி சிறந்த வெற்றிகளை பெற வழிவகுக்கும். ஆசிரியர்களும் நான்கு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் தாங்கள் எடுக்கும் பாடங்கள் மாணவர்களுக்கு எளிதில் புரிவதுடன், மாணவர்கள் ஒழுக்கத்தோடு உங்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள்.

மிருகவதை


அனைத்து விலங்குகளும் இறைவனின் படைப்பு தான். ஒரு சிலர் தங்களின் அறியாமையால் விலங்குகளை துன்புறுத்துகின்றனர். வேறு சிலரோ அவ்விலங்குகளை காரணமின்றி கொன்று விடுகின்றனர் இது இறைவனின் கோபத்தையும் சாபத்தையும் பெற்று தருகிறது. இந்த மிருகவதை பாவ வினைகள் நீங்க அல்லது குறைய நான்கு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம்.


பாடகர்கள்


கலைத்துறையில் இருப்பவர்கள் அதிலும் குறிப்பாக பாடகர்களுக்கு குரல் வளம் நன்கு இருப்பது அவசியம். பாடகர்கள் தங்கள் கை அல்லது கழுத்தில் நான்கு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் குரல் கட்டி கொள்வது, குரல் கமறல் போன்றவை ஏற்படாது. பாடும் பாடலில் பிறரை வசீகரிக்கும் காந்தத்தன்மை ஏற்படும்.

ஓம் நமசிவாய
Tags :

Rutrasam , rutrasham , mugam , muga

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top