விளக்கு பூஜையில் கவனிக்க வேண்டியவை குறித்து நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிவுகள் :
விளக்கு பூஜையில், விளக்கிற்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை
எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தரை உச்சி வடுகிலும் வைத்துவர அவா்களது
கணவா்கள் நலமுடன் வாழ்வார்கள்.
திருவிளக்குப் பூஜை செய்யும் போது குத்து விளக்கைத் தலை வாழை இலை மீது
வைத்துப் பூசை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாகச்
செழிப்புற்று ஓங்கும்.
விளக்கின் சுடா் நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது.
மெல்லத் தணிந்து அடங்கக் கூடாது.
விளக்கில் குளம் போல எண்ணையை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து, நிற்கின்ற காரணத்தால், அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது குற்றமாகும்.
அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்துவிளக்கு, அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.
விளக்கு என்பது லட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். உங்கள்
வீடு பிரகாசமாக இருக்க வேண்டின் எப்போதும் விளக்கும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
அடுப்பேற்று முன்பாக சுமங்கலிப் பெண்கள் காலையில் குறித்துவிட்டு, காமாட்சி விளக்கேற்றியோ, ஓம் சக்தி விளக்கேற்றியோ வழிபட்டு, அதிலிருக்கும் தீப ஒளியைக் கொண்டு அடுப்பேற்றி வர சகல நன்மைகள் ஏற்படும்.
விளக்கேற்றியவுடன் செய்யக் கூடாதவை
- விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
- வீட்டைப் பெருக்கக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.
- விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.
- விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
- விளக்கேற்றி விட்டு உடனே தலை குளிக்கக் கூடாது.
மேற்கண்டவாறு செய்தால் வீட்டில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள். அதனால்
தரித்திரமே குடிபுகும்.
விளக்குப் பூசை பற்றிப் புராணங்கள் சொல்வன, காலம் காலமாக நம்பிக்கையாக இருப்பன.
சாத்திரங்களில் கூறப்படுவன இவை.
----------------------------------------------------------------------------------------------------------------------------
Velaku Pooja yel kavanika vendiyavai kurithu namathu Om Namsivaya kuluvin moolam seru pathivukal :