அறிவியலால் விளங்க முடியாத அதிசயத்தில் ஒன்றான தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயிலைப் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிவுகள் :கர்நாடக மாநிலத்திலுள்ள  மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்.  இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர்  வெளிவந்தபடியே  இருக்கும். இக்கோயில் 7000 ஆண்டுகள் பழமையானது என்று அக்கோயிலின் குறிப்புகள் கூறுகின்றது. புதையுண்டு இருந்த இக்கோயில் தற்போது பூமா தேவியின் அருளால் மீட்டெடுக்கப்பட்டது.

இக்கோயிலில் சிவலிங்கமானது  நந்தி தேவரின் கீழ் பகுதியில் அதாவது நந்தியின் வாயிலிருந்து வருகின்ற நீரானது லிங்கத்தின் மேல்பகுதியில் படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

நந்தியின் வாயிலிருந்து வரும் நீரானது எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை  எந்தவெரு அறிவியல் தொழில்நுட்ப கருவிகளாலும், எந்த வரலாற்று ஆசிரியர்களாலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இக்கோயில் 1997 ம் ஆண்டு பூமியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த அதிசயம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த நீரானது அக்கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள 15 அடி ஆழமான இக்குளத்திற்கு சென்றடைகின்றதுஆனால் இக்கோயில் இந்த குளத்தின் நீர்மட்டத்தில் எத்தகைய மாறுபாடும் ஏற்படுவதில்லை.
இத்துடன் நந்தி தேவனை வழிபடும்போது கூற வேண்டிய ஸ்லோகத்தையும் நமது இந்த ஓம் நமசிவாய குழுவின் இந்த பதிப்பில் இணைத்துள்ளோம். அவையாவன,

நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ


ஓம் நமசிவாய

----------------------------------------------------------------------------------------------------------------------------

Tags:

Sri Dakshinamukha Namdi Tirtha Kalyani Kshetra

Post a Comment

Previous Post Next Post