அஷ்ட சாஸ்தா

0
சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது.

அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது.சம்மோஹன சாஸ்தா:


வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.

கல்யாண வரத சாஸ்தா:


தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.

வேத சாஸ்தா:


சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

ஞான சாஸ்தா:


தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.

பிரம்ம சாஸ்தா:


குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.

மஹா சாஸ்தா:


வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.

வீர சாஸ்தா:


ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.

தர்ம சாஸ்தா:


இவரே ஐயப்பனின் திரு அவதாரம்.

சபரிமலையில் காட்சி தருபவர் இவரே.
இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும்.


புண்ணிய பூமியான நேபாள தேசத்தை அப்பொழுது பளிஞன் என்ற அரசன் ஆண்டு வந்தான். மந்திர சாஸ்த்திரத்தில் பண்டிதனாகவும், காளியின் வரப்பிரசாதம் பெற்றவனாகவும் இருந்த அந்த அரசனுக்குப் புஷ்கலை என்ற ஒரு மகளும் இருந்தாள்.

பளிஞன்  தான் என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் பெறுவதற்காக அநேக கன்னி ஸ்திரீகளைக் காளிக்குப் பலியிடலானான். அதே தேசத்தில் பரமசிவனிடத்தில் பக்தி கொண்ட கன்னிகா என்ற கன்னி ஸ்திரீயும் வசித்து வந்தாள். பரமசிவனிடத்தில் பக்திகொண்ட கன்னிகாவையும் காளிக்குப் பலியிட பளிஞன் நிச்சயித்தான்.

கருணாமூர்த்தியான சங்கரன் கன்னிகாவை ரட்ஷிக்க எண்ணி, குமாரனாக இருந்த (ஐயனாரையும்) சாஸ்த்தாவையும் அவரது பூத கணங்களின் ஒன்றான  கருப்பண்ணனையும் கன்னிகாவிற்கு பாதுகாப்பு கொடுக்க பணித்து மறைந்தார்.

சாஸ்த்திரத்தில் வல்லவரான ஹரிஹர புத்திரன் பளிஞனால் செய்யப்பட்ட பல சூழ்ச்சிகளையும் வென்று கன்னிகாவை காப்பாற்றியதுடன்; சாஸ்தா தான் யார் என்பதனை  மன்னனுக்கு காட்டி  உபதேசித்து, உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு அல்லாமல், தன் மகளான புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து புஷ்களா காந்தன் என்ற நாமத்தையும் அடைந்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top