திருகண்டேஸ்வரம் ஆனந்த பைரவர் ஆலயத்தின் சிறப்பு பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :
கடலூர் மாவட்டத்திலிருந்து பண்ருட்டி சாலையில் சுமார் 14 கி.மீ தொலைவில் திருகண்டேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
○ படைக்கும் திறனை இழந்திருந்த பிரம்மதேவர், தன்னுடைய படைக்கும் திறனை மீண்டும் பெற்ற தலம் இதுவாகும்.
○ 'தன் தந்தை சம்ஹாரம் செய்யப்படுவதற்குத் தானே காரணமாகி விட்டோமே’ என்று சித்தப்பிரமை பிடித்ததுபோல் இருந்த பிரகலாதனின் சித்த பிரமையைப் போக்கிய திருத்தலமும் இதுதான்.
○ மகாபலி சக்கரவர்த்திக்கு சிரஞ்ஜீவித்துவம் அருளிய திருத்தலம்.
○‘சீரார் வடுவூர் சிவற்கொரு நந்தா விளக்கு’ என்று திருஞான சம்பந்தப் பெருமான் போற்றிப் பாடிய ஐயன் ஸ்ரீநடனபாதேஸ்வரர் அருளும் திருத்தலம்...
இப்படி பல பெருமைகளுக்குரியது
இந்தக் கோயிலில் ஈசான்ய மூலையில் சந்நிதி கொண்டருள்கிறார் ஸ்ரீஆனந்த பைரவர்.
பிரம்மதேவன் படைப்புத் திறனை மீண்டும் பெறுவதற்கு அருள்பாலித்த மூர்த்தி இவர்தான் என்கிறார்கள்.
இந்தப் பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் திராட்சைச் சாறு, மாதுளம் சாறு மற்றும் தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டால் கண்திருஷ்டி விலகும், திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையும்.
கொடுத்த கடன் திரும்பாவிட்டால், அஷ்டமி நாளில் இங்கு வந்து பைரவரை வழிபட்டால், வாராக் கடன்கள் வசூலாகும்.
பைரவரின் சந்நிதியில் பிரசாதமாக வழங்கப்படும் திராட்சை தீர்த்தம் மிகவும் விசேஷமானது.
வெட்டிவேர்,
விளாமிச்சைவேர்,
நன்னாரி வேர்,
பச்சைக்கற்பூரம்,
குங்குமப்பூ,
பன்னீர்,
கோரக்கிழங்கு,
கஸ்தூரி மஞ்சள்,
ரோஜா மொட்டு,
செண்பகம் மொட்டு,
மிராட்டி மொட்டு,
பேரீச்சங்காய்
ஆகியவைசேர்த்து ஆகம முறைப்படி தயாரிக்கப்படும் தீர்த்தம் ஆனந்த பைரவருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இந்தப் பிரசாத தீர்த்தத்தைப் பருகினால், உடற்பிணிகள் அனைத்தும் நீங்கிவிடுவதாக ஐதீகம்.
தம்மைத் தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக் கும் ஆனந்தம் அருள்வதற்காகவே ஆனந்த பைரவர் என்னும் திருப்பெயருடன் திகழும் இந்த பைரவ மூர்த்தியை நம் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசித்து, அருள் பெற்று மகிழ்வோம்.
ஓம் நமசிவாய