சங்காபிஷேகம்

0

சங்காபிஷேகம் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிப்புகள் :



சங்காபிஷேகம் என்பது கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் அதாவது சந்திரனுக்குரிய சோமவாரத்தில் சிவ பெருமானுக்கு செய்யப்படுகின்ற சிறப்பு மற்றும் விஷேச பூஜைகளில் ஒன்றாகும்.

கடலில் கிடைக்கப்படுகின்ற அரிய பொருட்களில் ஒன்றான சங்கை பயன்படுத்தி இந்த பூஜை செய்யப்படுகிறது.

பலவகையான சங்குகள் இருப்பினும் பூஜைகளுக்கு வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் மட்டுமே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

சங்கு பஞ்ச பூதங்களையும் எதிர்த்து நிக்கும் சக்தி கொண்டது.

சங்கானது ஒரு உயிர் பிறப்பு மற்றும் இறப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் பாத்திரமாகவும், இறந்த உயிருக்கு இறுதிச் சடங்கிலும் பயன்படுத்தப்படுகிறது.

சங்கிலிருந்து எழும் ஒலியானது பிரணவமாகிய ஓம் என்னும் ஓங்கார ஒலி.

சங்காபிஷேகம் வரலாறு :


தேய்ந்து போகும் சாபம் பெற்ற சந்திர பகவான் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். அந்த தவத்தின் பலனாக தான் சிவபெருமானின் சடாமுடியில் சந்திரன் அருள்பாலிக்கிறார்.
இதுதான் சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்றான சந்திரசேகர மூர்த்தி.

சந்திரன் தனது குளிர்ந்த தன்மையினால், தன்னிடமிருந்து பெருகும் அமிர்த தாரையினை சங்கில் நிரப்பி அதை சிவனுக்கு அபிஷேகம் செய்தான். இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவனை வாழ்த்தி, நாளும் நீ வளர்ந்து பூரணமாவாய் என்று வரம் அளித்தார்.  

சந்திரன் சங்காபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட்டு வளர்ச்சி பெற்றான்.

கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.

சங்கு இயற்கையிலேயே குளிரும் தன்மை கொண்டது. அந்த சங்கில் நிரப்படும் நீர் மேலும் குளிர்ந்து அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல், பக்தர்களுக்கு என்றும் அழியாத  வரத்தையும், வாழ்க்கையை அளிப்பார் என்பது ஐதீகம்.

சந்திர பகவானின் அம்சமாகிய சங்கினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், அதைக் காண்பதும் எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற நல்வாழ்க்கையையும் அளிக்கும்.

ஸ்ரீ சந்திர காயத்ரீ :


ஓம் பத்மத்வஜாய வித்மஹே! ஹேமரூபாய தீமஹி!! தன்னோ சோம்ப்ரஸோதயாத்!!!

நன்றி 

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top