நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு பற்றிய பகிர்வுகள் :


தஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் அல்லது தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாகும். இக்கோவில் 10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான இது 1987ஆம் ஆண்டு UNESCO - வால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு சொல்கிறது.

தஞ்சை பெரிய கோவில் பெயர்க்காரணம்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில்,  இராஜராஜேஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் துவக்ககாலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

தஞ்சை பெரிய கோவில் தல வரலாறு

காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட  விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் இந்த தஞ்சை பெரிய கோவில். உலகம் வியக்கும் உன்னதமான கோவில்.

இந்த கோவிலை கட்டுவதற்க்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. கற்களை செதுக்கி ஒரு வடிவத்திற்கு கொண்டுவருவதற்கு 25 ஆண்டுகளும், பின்பு செதுக்கிய கற்களை பொருத்துவதற்கு 9 ஆண்டுகளும் மொத்தம் 34 ஆண்டுகள் ஆனதாம்.
 
கோபுரம் மட்டும் தரைத்தளத்தில் இருந்து 216 அடி உயரத்தில் உள்ளதாம். அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையில் ஒரே கல்லிலாலானது.

இங்கிருந்து 7 கி.மீ தூரத்திற்கு, அருகில் உள்ள சாரபள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரேயொரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனர்.

தஞ்சை பெரிய கோவில் கோபுத்தத்தின் கலசத்தில் உள்ள நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளின் கட்டிடக்கலை வல்லுநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோவிலாகும்.

நன்றி

ஓம் நமசிவாய 

Post a Comment

Previous Post Next Post