நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இறந்தவர்கள் படத்தை வீட்டின் பூஜை அறையில் எப்படி வைத்து வழிபடுவது என்பது பற்றிய பதிவுகள் :
மனிதனாக பிறந்தவர் எல்லாம் ஒருநாள் இவ்வுலகை விட்டு செல்ல வேண்டும் என்பது உலக நியதி. அழிவு என்பது உடலுக்கு, ஆத்துமாவுக்கு அல்ல.
மனிதனாக பிறந்து இவ்வுலக வாழ்க்கையை அனுபவித்து இயற்கையான முறையில் இறைவனை அடைந்த நம் வாழ்க்கைக்கு ஒரு முன்னோடியாக இருந்த முன்னோர்களின் திருவுருவ படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
இதைத்தவிர இவ்வுலக வாழ்க்கையை அனுபவிக்காமல், செயற்கையாக அதாவது உடல்நலம் மற்றும் விபத்து போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் உருவப்படத்தை எக்காரணத்தைக் கொண்டும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது. (அவர்களின் ஆன்மா மிகவும் உக்ரமாக இருக்கும் என்பதால்)
முடிந்த அளவு இறந்த நம் முன்னோர்கள் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவதை தவிர்க்க வேண்டும். அதையும்மீறி வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடுவது என்றால் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாக கடைபிடித்து வழிபட வேண்டும்.
நம் முன்னோர்களின் திருவுருவ படத்தை பூஜை அறையில் வைக்கும் போது அது கடவுள் உருவப் படத்துக்கு கீழ் அல்லது சமமாக இருக்கும் படி அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்படங்கள் கடவுள் படத்தின் வரிசையிலோ அல்லது அதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் படியோ அமைக்கக் கூடாது.
வடக்கு அல்லது தெற்கு திசையில் இருக்கும் படி அமைக்க வேண்டும். தெற்கு திசையில் அமைப்பது மேலும் சிறப்பை தரும்.
இறைவனுக்கு செய்யப்படும் பூஜை பொருட்களை இவர்களுக்கு உபயோக படுத்தக்கூடாது. இவர்களுக்காக ஒவ்வொரு பொருளும் தனித்தனியாக வைத்து பூஜிக்க வேண்டும்.
இவர்களுக்கு அமாவாசை நாட்களில் செய்யப்படும் பூஜை மிகவும் சிறப்பானதாகும். குறிப்பாக வீட்டில் படையல் வைத்து வழிபடுவது, காகத்திற்கு உணவு படைப்பது மற்றும் அவர்களுக்கு விருப்பமான பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி அப்பணிப்பது போன்ற செயல்கள் அவர்களுக்கு நம் மீது ஒரு அன்பினை ஏற்படுத்தும்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் உடையவர்கள் மேற்கண்ட செயல்களை செய்வதால் தோஷத்திலிருந்து விடுபடலாம்.
பித்ரு என்பது நம் 21 தலைமுறைகளில் வாழ்ந்த முன்னோர்களின் ஆன்மா. அவர்களை முறையாக வணங்குவது நம் வாழ்வை ஒரு முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும்.
நன்றி
ஓம் நமசிவாய