மகாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மகாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது பற்றிய பதிவுகள் :


மகாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம். இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
 
சிவனுக்குரிய மகாசிவராத்திரி திருநாளில் சிவனை நினைத்து, விரதமிருந்து இரவில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்வது நல்லது.

மகாசிவராத்திரியில் விரத வழிபாடு நம் முன் வினைகள், ஜென்ப பாவங்கள் நீக்கி நல்லருள் கிடைக்கச் செய்யும்.

நாம் சிவனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யலாம், இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் இங்கு குறிப்பிட்டுள்ள அபிஷேகம் செய்வது மேலும் நன்மையை தரும்.

மேஷ ராசி

மகாசிவராத்திரி தினத்தில் வெல்லம் கலந்த நீரை சிவனுக்கு அபிஷேகம் செய்து, படைத்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதனால் நாம் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

ரிஷப ராசி

ரிஷப ராசியினர், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய, வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

மிதுன ராசி

மிதுன ராசியினர் சிவலிங்கத்திற்குக் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்ய உங்கள் மனதில் இருக்கும் பல்வேறு ஆசைகள் நிறைவேறும்.

கடக ராசி

கடக ராசியினர் சக்கரை கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யவும். பின்னர் மந்தாரைப் பூவால் அலங்காரம் செய்ய நினைத்தது விரவில் நடக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியினர் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய, உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி ராசி

கன்னி ராசியினர் பால் மற்றும் நீரால் அபிஷேகம் செய்யவும். இதனால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம் ராசி

துலாம் ராசியினர், பசும்பாலால் அபிஷேகம் செய்ய செல்வ செழிப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினர் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் நல்லது.

தனுசு ராசி

தனுசு ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்திரத்தை படித்தல் வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கும்.

மகர ராசி

மகர ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் நல்லெண்ணெய் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ பழத்தை படைத்தல் வேண்டும். இதனால் வாழ்வில் எதிலும் வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசியினர் இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய உங்களுக்கு நிதி வருவாயில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும்.

மீன ராசி

மீன ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு அபிஷேகம் செய்ய, வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நன்றி

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top