திருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம் பற்றிய பதிவுகள் :



இந்த திருநீறானது நான்காக வகைப்படுத்தப்படுகிறது. 

1. கல்பம், 
2. அணுகல்பம், 
3. உபகல்பம், 
4. அகல்பம். 

கன்றுடன் இருக்கும் ஆரோக்கியமான பசு சாணத்தை எடுத்து, அக்னியில் எரித்து வரும் சாம்பலை கல்பத் திருநீறு என்று கூறுகிறார்கள். 

காடுகளில் இருக்கும் பசுக்களின் சாணத்தை எடுத்து எரித்து அணுகல்பத் திருநீரு தயாரிக்கப்படுகிறது. 

தொழுவங்களில்லிருந்து எடுக்கப்படும் சாணத்தை எரித்து உபகல்பத் திருநீரு தயாரிக்கப்படுகிறது. 

வீதிகளில் இருக்கும் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு அகல்பம். 

இதில் உபகல்பத் திருநீறை தான் நாம் பயன்படுத்துகின்றோம். இந்த சாதனங்கள் அனைத்தும் சிவனின் ரூபமான அக்கினியில் எரித்து உருவாக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. 


திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்: 

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு 

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு 

தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு 

செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.



Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top