பழனிமலை முருகன்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பழனிமலை முருகன் பற்றிய சிறப்பு பதிப்புகள் :

ஞானத்தின் வடிவமான முருகப்பெருமான், கைலாயத்தில் தேவலோக ஞானப் பழத்தை பெறமுடியவில்லை என்ற கோபத்தில் ஆண்டி கோலம் பூண்டு பழனிமலைக்கு சென்று தண்டாயுதபாணியாக  மாறி விட்டதாக ஒரு புராணக் கதை உண்டு.

நாரதர் கொண்டு வந்த ஞானப்பழத்தை பெற வேண்டுமானால் ஈசன் படைத்த ஏழு உலகை முதலில் சுற்றி வருபவருக்கு தான் என்று கூறியதும். முருகப்பெருமான் தன் வாகனமான மயிலேறி வேகமாகப் புறப்பட்டார்.

ஆனால் முருகனின் அண்ணன் விநாயகரோ, அந்த ஏழு உலகத்தையும் தன்னில் அடக்கி அருள்பாலிப்பவர்கள் சிவ சக்தி என கூறி, அவர்களை வலம் வந்து ஞானப் பழத்தை பெற்றார்.

உலகை சுற்றி வந்த முருகன், அண்ணனின் கையில் ஞானப்பழம் இருப்பதை கண்டு அது எப்படி அவர் கையில் சென்று என தெரிந்து கொண்டார்.

அவர் ‘உமா மகேஸ்வரனே உலகம் அனைத்தும்’ என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனதே என ஒரு கணம் எண்ணிப் பார்த்தார்.

அது எப்படி அண்ணன் கணபதிக்கு மட்டும் இது தெரிந்தது என்பதை ஆராய்ந்த கந்தனுக்கு, பிள்ளையார் பிரணவ வடிவம், அவர் ஞானஸ்வரூபன். அந்த ஞானம் அவரின் கடும் தவத்தினால் கிடைத்தது. அதனால் தான் இந்த ஏழு உலகமும் சிவ பார்வதியின் வடிவம் என்பதை உணர்ந்தார், என்பதைப் புரிந்துக்கொண்டார் முருகன்.

அண்ணனைப் போல தானும் அந்த ஞானம் பெற, விரும்பினான். அதன் விளைவாக தான் தவக் கோலம் ஏற்று பழநி ஆண்டியாக பழனி மலையில் ஆண்டிக்கோலம் ஏற்றார்.

இப்படி அண்ணன் கணபதியைப் போல தானும் தவமியற்றி ஞானத்தைப் பெற ஞானஸ்கந்தனாக பழநியில் காட்சியளிக்கிறார்.

நெற்றிக் கண்ணில் உதித்த குமரன், ஞனக் கடலாக, ஞானத்தை பெறவும் அதை காக்கவும் எடுத்துக் கொண்ட கோலம் தான் பழனி ஆண்டிக்கோலம்.

அவர் பழம் கிடைக்க வில்லை என்ற ஆதங்கத்தில் ஆண்டியாகவில்லை. அந்த ஞானத்தைப் பெற்று மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும், ஞானத்தை வழங்கவும் ஏற்ற கோலம்.

தன்னை வணங்கக் கூடியவர்களுக்கும் அந்த ஞானத்தை வழங்கக் கூடியவர் முருகன். வெறும் அசுரர்களை அழிக்க மட்டும் உருவான உருவமல்ல. அவர் தர்மத்தை காக்கவும், ஞானத்தை கொடுக்கவும் உருவானவர்.

அநீதியை அழிக்கக் கூடிய சக்தி அவரின் பிறப்பிலேயே உண்டு.

இது போன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

ஓம் நமசிவாய

Post a Comment

1 Comments
  1. தங்களுடைய ஒரு பதிவில் பூம்பாறை முருகன் நவபாஷாணத்தால் ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.ஆனால் அது தசபாஷாணத்தால் ஆனது என்று நம்புகிறேன்
    தயவுசெய்து தெளிவுபடுத்தவும்

    ReplyDelete
Post a Comment
To Top