இந்த உலகில் உள்ள அனைத்தும் இறுதியில்
பிடி சாம்பலாக மாறும் என்னும் தத்துவத்தை திருநீறு உணர்த்துகிறது.
இதனால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக
கருதப்படுகிறது.
ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும்
சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி
குறிக்கின்றது.
திருநீறு அணியும் இடங்கள்
உடலில் திருநீறு அணியக்கூடிய
இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை
1. தலை நடுவில் (உச்சி)
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு சற்று மேல்.
5. இடது தோள்
6. வலது தோள்
7. இடது கையின் நடுவில்
8. வலது கையின் நடுவில்
9. இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு
திருநீறு அணிவதன் பலன்கள்
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச்
சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற
செல்வம், நல்வாக்கு, நல்லோர்
நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப்
பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர்
பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
"கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!"
திருநீறு அணிவதால் செய்த பாவங்கள்
நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி
அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ
நூல்களில் கூறப்பட்டுள்ளது.
திருநீறு அணியும் போது சொல்ல வேண்டிய
ஸ்லோகம் ,
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது
நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது
நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான்
திருநீறே.
ஓம் நமசிவாய
Super sir
ReplyDeleteit is really good initiative. kinldy share lot of information to new generations.
ReplyDelete