நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எதனால் புரட்டாசி மாதம் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகின்றது என்பது பற்றிய சிறிய பதிவுகள் :


பெரும்பாலான மக்கள் மாதத்தின் அனைத்து நாள்களிலும் அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த புரட்டாசி மாதத்தை மட்டும் விதிவிலக்காக கொண்டுள்ளனர்.

இதற்கு புராண ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும் தற்போதைய அறிவியல் காலகட்டத்தில் அறிவியல் ரீதியாகவும் இதற்கு பல பதில்கள் உள்ளன. இதனாலேயே அறிவியல் கலந்த இந்து மதம் என்கிற வார்த்தை வழக்கத்தில் உள்ளது.

ஏன் இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

புராண ரீதியான விளக்கங்கள் :

புராணங்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ராசி அதிபதிகள் உள்ளனர். அந்த வகையில் புரட்டாசி மாதத்திற்கான அதிபதியாக கன்னி ராசி அமைந்துள்ளது. 

இந்த கன்னி ராசியின் அதிபதியாக நவகிரகங்களில் ஒன்றான புத பகவான் அமைந்துள்ளார். இவர் ஸ்ரீ அனந்த பத்மநாபனின் அம்சமானவன். மேலும் இவர் சுத்த சைவ கிரகமாக போற்றப்படுபவர். 

இதனால் புரட்டாசி மாதம் விரதமிருந்து பெருமாளை நினைத்து வழிபடுவதால் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.

அறிவியல் ரீதியாக விளக்கங்கள் :

பொதுவாக புரட்டாசி மாதம் என்பது மழைக்காலத்திற்கான துவக்க காலமாகும். அதாவது வெயிலும் மழையும் கலந்த ஒரு காலகட்டமாகும். சாதாரண வெயில் காலத்தை விட இந்த காலமானது மிகவும் மோசமான கெடுதலை தரக்கூடியது.

இந்த வெயில் தாக்கமானது காய்ச்சல், சளி போன்ற உடல் ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இந்த காலங்களில் விஷ கிருமிகள் அதிகப்படியான உற்பத்தியாகும் காலங்கள் எனவும் அசைவ உணவுகளை சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரித்து நோய்கள் உருவாக அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்த காலகட்டத்தில் சைவ உணவுகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடல் வெப்பநிலையை சீர்படுத்தும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


Post a Comment

Previous Post Next Post