நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை வைத்து பூஜிக்க வேண்டும் என்பதை பற்றிய பதிவுகள் :

விநாயகர் :

சிவப்பு நிறப் பூக்கள் என்றால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். செம்பருத்தியில் நிறைய வண்ணங்கள் இருந்தாலும் சிவப்பு நிற செம்பருத்தி விநாயகருக்கு மிகவும் பிடித்தது.

இதைத் தவிர தாமரை, ரோஜா, மல்லிகை, சாமந்தி இவற்றைச் சமர்ப்பிக்கலாம். அறுகம்புல் விநாயகருக்கு உகந்தது. கணபதி பூஜை செய்யும்போது 21 விதமான மலர்கள் மற்றும் இலைகளைக் கொண்டு பூஜிக்கப்படுகின்றது.

சிவபெருமான் :

சிவபெருமானுக்கு வெள்ளை நிற மலர்கள் மிகவும் பிடிக்கும். மகிழம் பூ, தாமரை, ஊமத்தம் பூ, பாரிஜாதம், செவ்வரளி இவற்றைச் சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்கலாம்.

சிவனின் பூஜையில் வில்வ இலை முக்கிய பங்கு வகிக்கின்றது. பூச்சி அறித்த வில்வ இலைகளைப் பூஜைக்குப் பயன்படுத்த வேண்டாம். சிவனுக்குப் படைக்கும் எல்லா மலர்களும் பார்வதிதேவிக்கு உகந்தது. சிவனுக்குத் தாழம்பூ வைக்கவே கூடாது.

துர்க்கை :

சிவப்பு நிற மலர்களைத் துர்க்கைக்குச் சமர்ப்பணம் செய்யலாம். தாமரை, மல்லிகை, அரளி போன்ற வாசனை உள்ள பூக்களைப் பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

விஷ்ணு :

விஷ்ணுவிற்கு தாமரை மலர் மிகவும் பிடித்தது. தாமரை, மல்லிகை, சம்பங்கி இவற்றைப் பூஜைக்குப் பயன்படுத்தலாம். விஷ்ணு பூஜையில் துளசி முக்கிய பங்கு வகிக்கின்றது.

மகாலட்சுமி :

தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்குத் தாமரை பூ தான் சிறந்தது. சாமந்தி, ரோஜா, பன்னீர் ரோஜா போன்ற வாசனை மிகுந்த பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி - செம்பை ஸ்ரீபாலா சத்சங்கம்.

Post a Comment

Previous Post Next Post