எண்ணெய் தீபம் ஏற்றுவதற்கான சூட்சுமம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எண்ணெய் தீபம் ஏற்றுவதற்கான சூட்சுமம் பற்றிய பதிவுகள் :

ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே செய்வது தவறு. எந்த காரணத்திற்காகவும்  ஒரு எண்ணெயுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது.

அதர்வன மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,

சரியாக கூறுவதானால் நாம் நடைமுறையில், அதாவது  பஞ்ச (5) தீபம் என்று பெயர், 5 வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், 5 தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு
ஒரு அகலில் நல்லெண்ணெய்.
இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய்.
மற்றொன்றில் விளக்கு எண்ணெய்.
அடுத்ததில் பசு நெய்.
அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,

ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது. ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், 

இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும்,
இந்த  முறை பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமே, பில்லி சூன்யம். வம்பு. வழக்கு. தீரா நோய் இவைகள் அடங்கும் . அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில்
நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய்  ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,

 மூன்று அகலில் ஒவ்வொன்றின்  வீதம் தேங்காய் எண்ணெய். நல்லெண்ணெய். பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும் . 

இப்படி பல செயல்களுக்கும் இந்த பல வகை எண்ணெய் தீபம் ஏற்றும் முறை உண்டு, ஆனால் இன்று இந்த நல்முறை அறியாததால் தவறு நடக்கிறது,

ஆக தீபத்திற்கான எண்ணெய் கலப்படமாகாமல் ஏற்றுவதே சிறந்தது. மூன்று அல்லது ஐந்து எண்ணெய் தீபம் ஏற்றி இறையருள் பெறுவோம்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top