நமது ஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நமது ஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு என்பது பற்றிய பதிவுகள் :
சூரிய திசை வந்தால் கண்டிப்பாக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;

சந்திர திசை வந்தால் சாந்தமான பெண் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
 
அதேசமயம் சந்திரனுடன் இராகு, செவ்வாய் போன்ற பாவக் கிரகச் சேர்க்கை இருந்தால் உக்கிரமான பெண் தெய்வத்தை ‘முறைப்படி’ வழிபட வேண்டும்.

செவ்வாய் திசை வந்தால் சஷ்டி திதியில் முருகக் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும். அவரவர் ஜனன ஜாதகப்படி கடலோர முருகன் அல்லது மலைமீது அமர்ந்திருக்கும் முருகக்கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்.

புதன் திசை வந்தால் மகாவிஷ்ணு வழிபாடு செய்ய வேண்டும்.

குரு திசை வந்தால் சித்தர்கள் வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சுக்கிர திசை வந்தால், திருக்கோவிலூருக்கு அவரவர் ஜாதகப்படி சென்று வழிபட வேண்டும். அவசியப்பட்டால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சனி திசை வந்தால் ஸ்ரீ காலபைரவ வழிபாடு செய்ய வேண்டும். 

இராகு திசை வந்தால் நாகர்கோவில் நாகராஜா கோவில், பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவிலினுள் அமைந்திருக்கும் கருவூர் சித்தர் வழிபாடு, திருநாகேஸ்வரம், காளஹஸ்தி பாதாளபைரவர் வழிபாடு இவைகளில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

இராகுவின் நட்சத்திரம் நிற்கும் நாளில், இராகு காலத்தில் வழிபாடு நற்பலன்களைத் தரும்.

கேது திசையில் தேய்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top