கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்திகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் பற்றிய பதிவுகள் :

1. அகோபில நரசிம்மர் : 

உக்ர நிலையில் உள்ள மூர்த்தி.

2. பார்க்கவ நரசிம்மர்: 

 ராமரால் வழிபடப்பட்டவர் இவர். பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.

3. யோகானந்த நரசிம்மர்: 

 உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

4. சத்ரவத நரசிம்மர்: 

பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் இருப்பவர் இவர்.

5. க்ரோத (வராக) நரசிம்மர்: 

வராக வடிவம் கொண்ட நரசிம்மர்.

6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்

கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர்:

"மா' என்றால் லட்சுமி."லோலன்” என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராக இருப்பவர்.

8. பாவன நரசிம்மர்:

பவனி நதிக்கரையில் அமர்ந்ததால் இப்பெயர் பெற்றார். 

9. ஜ்வாலா நரசிம்மர்:

மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.

இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர்.

அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். 

யோக நரசிம்மரின் சிறப்பு 

குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்.

விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.

பூஜை முறை 

நரசிம்ம ஜெயந்தி விரத முறை ஏகாதசி விரத முறையை ஒத்தது ஆகும். இந்நாளில் பகவான் நரசிம்மரை அவர் தோன்றிய சந்தியாகாலத்தில் , அதாவது பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6) இவரை விரிவாக பூஜிக்க வேண்டும்.

நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு.

பலன்கள் 

பகவான் நரசிம்மரை வழிபடுவதால் நமது ஆன்மீகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவர்.

Tag :

#karudan vazhibatta onbathu narasimma moorthangal

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top