ஷோடஸாக்ஷரி மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஷோடஸாக்ஷரி மந்திரம் பற்றிய பதிவுகள் :

மந்திரங்களில் தலைசிறந்தது, ஸ்ரீ ஷோடஸாக்ஷரி ,ஷோடஸாக்ஷரியின் மூலரூபமே அன்னை ஸ்ரீஷோடஸீ.

இவளுடைய மந்திரத்தில் ஏழு கோடி மஹாமந்திரங்களும் அடக்கம். இவளை மிஞ்சிய தெய்வம் இல்லை. இவளே ஆம்னாயங்களுக்கெல்லாம் தலைவி. ஸ்ரீ வித்யையின் மகுடம், மஹாராக்ஞீ.

ப்ரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன், ருத்ரன் நான்கு கால்களாக , சதாசிவனே மஞ்சப்பலகையாக அதன்மீது ஜகத்திற்க்கெல்லாம் தாயாக, கருனையே வடிவாக, அன்பைப் பொழியும் மூன்று கண்களோடு , வீணை என்கின்ற குண்டலினி ஜாக்ரனத்தை மீட்டுபவளும், அங்குசம் என்ற ஆயுதத்தால் அடங்க மறுக்கும் யானை என்ற க்ரோதத்தை அடக்குபவளும். 

பாசம் என்ற கயிற்றால் காமத்தை அடங்கி நல்வழியில் செயல்படுத்துபவளும், மாணிக்கத்தால் ஆன அக்ஷமாலையை ஏந்தி யோகநிலையை உணரவைப்பவளும், புத்தகத்தினால் ஸகல ஞானத்தை அருள்பவளும், தாமரைகளினால் எங்கும் மங்களங்களையும், செழிப்பையும் தருபவளும், அபய வரதத்தினால் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளையும் சீராட்டி, வேண்டுவன அருள்பவளும்,

 சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் இவற்றை தன் கைகளில் பஞ்சபானமாக ஏந்தி பக்தனின் ஐம்பொறியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவளும், மனம் என்னும் செங்கரும்பை வைத்திருப்பவளுமாகிய சிந்தூர வர்ண சுந்தரியான ஷோடஸீ என்ற தேவியை வணங்குவோம்.

Tag :

#Shodashakshari Mantra

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top