எமன் வழிபட்ட நவகிரகங்கள் இல்லாத சிவ ஆலயங்கள்

3
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எமன் வழிபட்ட நவகிரகங்கள் இல்லாத சிவ ஆலயங்கள் பற்றிய பதிவுகள் :

நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவன் கோயில்கள் 14 உள்ளன. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டு இருக்கிறானோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம். 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

நான்காவது ஸ்தலம் திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.

திருப்பைஞ்சீலி. வாழை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது.  

திருக்கடையூரில் மானிடர்களின் உயிரை பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கிதாக ஐதீகம்  

காளஹஸ்தி ஆறாவது ஸ்தலம் . பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட தங்கஏணியில் (golden ladder) ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும. இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தை குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏணி சிவலிங்கத்தின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.

திருமழபாடி. திருவையாருக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை. 

திருக்கடையூர் . இதன் தலபுராணம் வித்தியாசமானது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது.
 
ஒன்பதாவது ஸ்தலம் திருமழபாடி திருவையாறு அருகில் இருக்கிறது. 

பின் பத்தாவது ஸ்தலம் திருவெங்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விட பழமையானவர். 

அடுத்து திருப்புரம்பியம் பதினோராவது ஸ்தலம். இங்கும் நவக்கிரகம் கிடையாது. 

இதைத்தவிர இன்னும் நவகிரகங்கள் இல்லாத புகழ்பெற்ற பல சிவ ஆலயங்கள் உள்ளன.

Tag :

#purathana shivan kovil

Post a Comment

3 Comments
 1. பொய்யான தகவல். சில 100 வருடங்களாக தான் நவக்ரஹ விகிரகங்கள் அமைத்து வழிபடும் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு வழக்கம் இல்லாததனால் நான் ,தஞ்சை பெருவுடையார் போன்ற 1000 ஆண்டு பழமையான கோவில்களில் நவகிரக வழிபாடு இல்லை.ஆன்மிகத்தை வைத்து ,மூடநம்பிக்கைகளை சில சுயலாபங்களுக்ககாக செய்வதால் தான் இன்று நம் கலாச்சார முறை சீர் கெட்டும் , இந்த தலைமுறையினருக்கு ஆன்மிக நம்பிக்கை குறைந்தும் போயுள்ளது.-Sridhar.MA Astrology

  ReplyDelete
  Replies
  1. சிவாயநம

   நவக்கிரக வழிபாடு என்பது நமது முன்னோர்கள் தொன்றுதொட்டு வழிபட்டு வந்ததற்கான பல சான்றுகள் உள்ளன.

   நவகிரகங்களை வைத்து தான் ஜோதிட சாஸ்திரமே உருவானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

   நவகிரக விக்ரகங்கள் அனைத்து சிவ ஆலயங்களிலும் பிரதிஷ்டை செய்யப்படுவதில்லை. இதைத்தவிர சிவ ஆலயங்களில் மட்டுமே நவகிரக விக்ரகங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதும் முறையல்ல.

   நான்கு யுகங்களிலும் நவகிரக விக்ரகங்கள் வைத்து வழிபட்டதற்கான புராண குறிப்புகள் உள்ளன.

   உதாரணமாக ராமேஸ்வரத்தின் அருகில் தேவிபட்டினம் என்னும் ஊரில் நவகிரக ஆலயம் உள்ளது. இங்கு ஸ்ரீ ராமர் நவபாஷாண கற்களால் நவகிரக விக்ரகங்களை பிரதிஷ்டை செய்ததாக புராண குறிப்புகள் உள்ளன. இந்த ஆலயம் 2500 - 3000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் சான்றளித்துள்ளனர்.

   புத்தகங்கள் என்பது நமது அறிவை வளர்க்க உதவும் ஒரு கருவி மட்டுமே. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை உண்மையா பொய்யா என்பதை நமது திறமை மற்றும் அனுபவத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

   தொலைத்த இடத்தில் தொலைந்தவற்றை தேடுங்கள். !
   விதையை விதைத்தவனை விட, அறுவடை செய்பவன் உயர்ந்தவனில்லை. !

   Delete
Post a Comment
To Top