கர்பகாலத்தில் சுமங்கலி பெண்கள் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கர்பகாலத்தில் சுமங்கலி பெண்கள் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றிய பதிவுகள் :

கர்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள் மற்றும் கிரகங்கள் குறித்து பிரஹத்ஜாதகம் எனும் மூலநூலில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண் தான் கர்பம் அடைந்துள்ளோம் என அறிந்தது முதலாக பிரசவகாலம் வரை பத்து மாதங்கள் தோறும் ஒவ்வொரு குறிப்பிட்ட மாதத்திற்கு உரிய கிரகங்களையும் அதன் அதிதெய்வங்களை வழிபட்டு நல்ல பிரசவமாக அமையவும், அறிவும், ஆயுளும், நல்லொழுக்கமும் கொண்ட வாரிசு உருவாகி தன்வம்சத்தை விருத்திசெய்யும் குழந்தை பிறக்க இறைவனை பிராத்தனை செய்தல் நன்று. தலைப்பிரசவம் மற்றும் அடுத்த குழந்தையாக இருப்பினும் இந்த "கர்ப மாத தெய்வங்களை" வழிபடுதல் நல்லது.

எட்டாம் மாதத்திற்கு சாந்தி முகூர்த்த லக்னாதிபதி (தலைப்பிரசவத்திற்கு மட்டும்)யை வணங்கவேண்டும். சாந்திமுகூர்த்த லக்னாதிபதி தெரியாத நிலையில் சுக்கிரனையும், சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீலக்ஷ்மியை வணங்குதல் நன்று. இரண்டாம் பிரசவத்திற்கு சுக்கிரன் மற்றும் கர்பினியின் ஜன்ம லக்னாதிபதியை வழிபடவேண்டும்.

மூன்றாம் மாதத்திற்குரிய பிரம்மாவிற்கு தனியாக கோவில் இல்லை என்பதால் பிரம்மாவிற்கு பதிலாக காயத்ரி, விஸ்வகர்மா அல்லது தக்ஷ்ணாமூர்த்தியை வணங்கவேண்டும். அதுபோலவே ஆறாம் மாதத்திற்குரிய எமனுக்கு பதிலாக சிவனை வழிபடவேண்டும்.

தர்மம் இல்லாத வழிபாடு என்றுமே பலன்தராது. எனவே ஒவ்வொரு கர்ப மாதமும் கர்பினியின் ஜென்ம நட்சத்திரத்திரம் அல்லது கணவரின் ஜன்ம நட்சத்திரத்திம் உள்ள நாளில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். தங்களால் தனியாக தானம் செய்ய இயலவில்லை என்றால் நமது ஓம் நமசிவாய அறக்கட்டளையுடன் இணைந்து அதிகப்படியான ஆதரவற்ற மக்களுக்கு உதவிட முடியும். 

பூமுடிப்பு (பூமுடித்தல்), வளைகாப்பு, சீமந்தம் அன்று அல்லது ஏழாவது மாதத்தில் வறுமையில் வாடும் தாய்மார்களின் ஏழை பச்சிளம் குழந்தைக்கும் மற்றும் ஏழை மக்களுக்கு திருமண உதவிகள் செய்து கொடுக்கவும்.

குலதெய்வம் வழிபாடு கர்பகாலத்தில் மிகமுக்கியமானதாகும், குழந்தையின் முதல் பெயர் குலதெய்வத்தின் பெயரையே அல்லது அதனுடன் தொடர்புடைய பெயரையே சூட்டவேண்டும்.

முதல் மாதம் சுக்கிரன், இரண்டாம் மாதம் செவ்வாய், மூன்றாம் மாதம் குரு, நான்காம் மாதம் சூரியன், ஐந்தாம் மாதம் சந்திரன், ஆறாம் மாதம் சனி, ஏழாம் மாதம் புதன், எட்டாம் மாதம் சுக்கிரன், ஒன்பதாம் மாதம் சந்திரன், பத்தாம் மாதம் சூரியன் என கிரகங்களையும் அதன் அதிதெய்வங்களையும் வழிபடவும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top