சப்த கன்னியர்கள் வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சப்த கன்னியர்கள் வழிபாடு பற்றிய பதிவுகள் :

சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் குலம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

பெண் தெய்வ வழிபாட்டிலும் சக்தி வழிபாட்டிலும் கிராம தெய்வ வழிபாடுகளிலும் சப்த கன்னியருக்கு முக்கியமான இடம் உண்டு. பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என ஏழு தெய்வங்களும் சப்த கன்னியர் என்று போற்றுகிறது புராணம். இந்த ஏழு தேவியரும் தீமையை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் வந்தவர்கள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.

இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.

சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள்.

ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள்.

அதேபோல், சப்தகன்னியர் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

Related Tags :

Viratham | Saptha Kannigal 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top