பிரதோஷ வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து‌ பிரதோஷ வழிபாடு பற்றிய பதிவுகள் :

சிவனை வழிபட எத்தனையோ முக்கியமான தினங்கள், பண்டிகைகள், விசேஷங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நாளாக கருதப்படுவது பிரதோஷம் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரியோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள நேரமாகும். பிரதோஷ வேளையான இந்நேரத்தில் சிவபெருமானையும், நந்திதேவரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானது ஆகும்.

வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'சுக்கிர வாரப்பிரதோஷம்" ஆகும். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், மறக்காமல் சிவதரிசனம் செய்தால் பகைகள் விலகும். குடும்ப பாசம் கூடும்.

பிரதோஷ நாளில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பிரதோஷ நாட்களில் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வழங்கலாம்.

வில்வ இலைகளை கொண்டு சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

பிரதோஷ நாட்களில் அன்னதானமாக தயிர்சாதம் வழங்குவது இன்னும் பலம் சேர்க்கும்.

பசுவுக்கு உணவிடுங்கள். சந்ததி சிறக்க வாழலாம்.

சிவபெருமானையும், நந்தியையும் வழிபடும்போது யாருடனும் பேசாதீர்கள்.

எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள்.

சிவனின் நாமத்தை மட்டும் உச்சரியுங்கள்.

நந்தியை மறைத்துக் கொண்டு சிவபெருமானை வணங்காதீர்கள்.

சிவனை அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :

சிவனை தூய நல்லெண்ணெயில் வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகம் செய்தால், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

சுத்தமான பசுவின் கறந்த பாலில் அபிஷேகம் செய்தால், தீர்க்க ஆயுள் கிடைக்கும்.

சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால், குயிலினும் இனிய குரல் கிடைக்கும்.

சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால், மனநிறைவு உண்டாகும்.

இளநீர் அபிஷேகம் செய்தால், பேரானந்தம் கிட்டும்.

பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தயிர் அபிஷேகம் செய்தால், சம்பத்து கிடைக்கும்.

கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால், உடல் வலிமை பெறும்.

மஞ்சள் அபிஷேகம் செய்தால், அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும்.

ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க வாழ்க 
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க வாழ்க 
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க வாழ்க

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top