சகல நோய்களிலிருந்து விடுபட சர்வ ரோக நிவாரண மந்திரம்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சர்வ ரோக நிவாரண மந்திரம் பற்றிய பதிவுகள் :

நாமத்ரய மந்திரமானது நாமத்ரய அஸ்த்ர மந்திரம் என்று அழைக்கப் படுகிறது. இம்மந்திரம் எல்லா வகையான நோய்களையும் அஸ்திரமாக நின்று அழிக்கவல்லது. மகா விஷ்ணுவின் மூன்று திவ்ய நாமங்களை கொண்டதே இந்த நாமத்ரய மந்திர அஸ்திரம். 

நாமத்ரய மகா மந்திரம் :-

ஓம் அச்சுதாய நம:

ஓம் அனந்தாய நம:

ஓம் கோவிந்தாய நம:

சர்வ ரோக நிவாரண மந்திரம் என்றும் இதனை கூறுவர். எத்தகைய கொடிய நோயாக இருப்பினும் அதனை இத்திவ்ய நாமத்தை ஜெபிப்பத்தின் மூலம் சரி செய்துவிட முடியும் என்று வியாச மகரிஷி கூறியுள்ளார். 

தேவி லலிதா மகா திரிபுரசுந்தரிக்கும் பண்டாசுரனுக்கும் இடையிலான போரில், பண்டாசுரன் பல அஸ்த்திரங்களை சக்தி சேனையின் மீது தொடுத்தான். எல்லா அஸ்த்திரங்களுக்கும் எதிர் அஸ்த்திரங்களை தொடுத்து அன்னை வெற்றி கொண்டாள். 

அதன் பின் பண்டாசுரன் மகா ரோகாஸ்த்திரத்தை சக்தி சேனை மீது தொடுத்தான். இதனால் சக்திகள் பல வகையான ரோகங்களுக்குட்பட்டு பரிதவித்தனர். அப்போது அன்னை ஸ்ரீ லலிதை மகா திரிபுரசுந்தரி இந்த நாமத்ரய அஸ்த்திரத்தை தொடுத்து சர்வ ரோகங்களையும் நிவாரணம் செய்து, பண்டனின் ரோகாஸ்த்ரத்தை தோற்கடித்தாள். 

இம் மந்திரத்தை ஜபம் செய்ய தனிப்பட்ட உபதேசங்களோ தீக்ஷைகளோ தேவையில்லை. முழு மனதோடு இம்மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜபித்து வருவதன் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி குணப்படுத்தவும் முடியும். 

இதனை சாதாரண ஜபமாகவோ அல்லது லிகித ஜபமாகவோ ( ஏட்டில் எழுதுவது) ஓர் நாளுக்கு குறைந்தபட்சமாக 108 முறை ஜபித்து வர வேண்டும். 

அன்னை லலிதை பயன் படுத்திய ரோக நிவாரண அஸ்த்திரமான இம்மகா மந்திரத்தை நாமும் முழு மனதோடு ஜபித்து இன்றைய தினத்தில் நம்மை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களை அழிக்க எல்லாம்வல்ல ஜகன் மாதாவை பிரார்த்திப்போம். 

மேலும் இப்பதிவை பகிர்ந்து நம்மைச் சார்ந்தோருக்கும், நண்பர்களுக்கும் இம்மந்திரத்தின் மகத்துவத்தை எடுத்துக் கூறி நம்மால் இயன்ற நன்மையைச் செய்வோம். 

பாலாம்பிகே சரணம்.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top